படு மொக்கையாக சென்று கொண்டு இருக்கும் சூப்பர் ஹிட் சீரியலுக்கு முடிவு – வெளியான கிளைமாக்ஸ் காட்சியின் புகைப்படம்.

0
7157
zee
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில்களில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.

-விளம்பரம்-

இதே பார்முலாவை கையில் எடுத்து ஜீ தமிழும் செம்பருத்தி, சத்யா, யாரடி நீ மோகினி என்று சினிமா டைட்டில்களில் பல சீரியலை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் யாரடி நீ மோகினி சீரியலும் ஒன்று. சன் தொலைக்காட்சியில் ஒளிப்பிரான நந்தினி சீரியலுக்கு பிறகு தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பட்ஜெட்டை கொண்டு உருவான சீரியல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : கர்ப்பமாக இருப்பதை படு சீக்ரெட்டாக வைத்து குழந்தை பிறந்த பின் புகைப்படத்துடன் அறிவித்துள்ள மியா.

- Advertisement -

ஆரம்பத்தில் சஞ்சீவ் ஹீரோவாக நடிக்க, வில்லிகளாக பாத்திமா பாபு, சைத்ரா ரெட்டி இருவரும் நடித்தன. ஆரம்பத்தில் இந்த சீரியலில் சஞ்சீவ் நடித்து வந்தார். அதன் பின்னர் அவர் நீக்கப்பட்டு தற்போது பிரபல சீரியல் நடிகரான ஸ்ரீகணேஷ் நடித்து வருகிறார். இதில் சைத்ரா ரெட்டியின் பெர்ஃபாமன்ஸ் காரணமாகவே இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நம்பர் ஒன் இடத்திலிருப்பதாக அவரது ரசிகர்கள் பெருமிதம் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியல் 1200 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக இந்த சீரியல் மிகவும் சலிப்பாக போய்க்கொண்டு இருப்பதால் விரைவில் இந்த சீரியலை முடித்து விடுங்கள் என்று ரசிகர்கள் தொடர்ந்து கமன்ட் செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீரியல் விரைவில் நிறைவடைய இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement