ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’ .அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் மெர்சல் வருகிற 18ம் தேதி தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கிறது.இப்படத்தின் சிறப்பம்சங்கள் இது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமாகும் , காஜல் , சமந்தா , விஜயுடன் மூன்றாவது முறையாக கை கோர்க்கின்றனர். விஜயுடன் அட்லி இரண்டாவது முறையாக இனைகிறார். மேலும் இப்படத்தின் பாடல்கள் ஏ.ஆர் . ரகுமான் இசையில் பட்டிதொட்டியெங்கும் பரவிவிட்டது.

இதையும் படிங்க: மெர்சல் படத்தில் எதற்காக அந்த காட்சிகள் நீக்கப்பட்டன – வருத்தத்துடன் எடிட்டர் !

Advertisement

விஜய்யை குஷி படத்தின் மூலம் ஸ்டைலிஷாக காட்டியவர் எஸ்.ஜே.சூர்யா . வடிவேலு மற்றும் வடிவேலுவின் ஆன் ஸ்கிரீன் ஜோடி கோவை சரளா என இப்படி ஒரு பிரமாண்ட பட்டாலமே இதில் இனைந்து பணியாற்றி உள்ளது. இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார் .

இதன் முக்கிய கருவாக ஜல்லிக்கட்டு பிரச்சினை தான் இப்படத்தின் மைய கரு . மூன்று வேடங்களில் நடித்திருக்கும் விஜயின் வசனங்களுக்கு விசிலும் , கை தட்டளும் பரக்கும்மேன படக்குழு மார்தட்டுகிறது.

Advertisement

காதல் , ஆக்சன் , மருத்துவ ஊழல் என படம் விரு விரும்பும் நிறைந்திருக்கும். அதில் இடைவெளி காட்சி படத்தின் பெயருக்கு கன கட்சிதமாக பொருந்தும் என படக்குழு கூறுகிறது .

Advertisement

இதில் ராஜமவுலியின் தந்தையும் வசனகர்த்தாவும் இயக்குனருமான விஜேந்தர பிரசாத் இப்படத்திற்கு வசனம் மற்றும் திரைக்கதை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement