மெர்சல் படம் வெளியாகும் முன்பு படம் சந்தித்த பிரச்சனைகள் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், படம் வெளியான பின் பாரதிய ஜனதா கட்சியினர் செய்த பிரச்சனைகள் தேவை இல்லாதது என அக்கட்சியின் பிரமுகர் ஒருவரே கூறி இருந்தது நினைவுகூறத்தக்கது.
இந்த கட்சி செய்த பிரச்சனைகளால் மெர்சல் படத்திற்கு தேசிய அளவில் விளம்பரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜி.எஸ்.டி பற்றிய காட்சிகளை நீக்கக்கூறிய பாரதிய ஜனதா கட்சியினருக்கு வைகோ முதல் ராகுல் காந்தி வரை பலரும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல் என அக்கட்சிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அயல் நாட்டையே அதிரவைத்த மெர்சல்..! பாராட்டிய அமைச்சர் யார் தெரியுமா ?

Advertisement

தற்போது விஜய் ரசிகர் ஒருவர் சமூக வலை தளத்தில் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். தொடர்ச்சியாக விமர்சனம் செய்ததால் அக்கட்சி பிரமுகர்கள் கொடுத்த புகாரின் பேரில் அந்த குறிப்பிட்ட விஜய் ரசிகரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

பிதமராயினும் சரி கடைக்கோடி வார்டு கௌன்சிலராயினும் சரி ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் பொது வாழ்வில் உள்ள ஒரு மக்கள் பிரதிநிதியை விமர்சிக்க முழு உரிமை கொடுத்துள்ளது நமது அரசியல் அமைப்புச் சட்டம். இது போன்ற புகார்களால் கருத்து சுதந்திரத்தை பரித்து உரிமை மீறல் செய்கிறது அந்த கட்சி என விஜய் ரசிகர்கள் வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement