சினிமாவில் தன் ஆசை குறித்து நடிகை ராசி கன்னா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ராசி கண்ணா. இவர் டெல்லியை பூர்விகமாக கொண்டவர். சினிமாவில் நுழைந்த 10 ஆண்டுகளில் இவர் இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.இவர் இந்தி சினிமாவில் தான் முதன் முதலில் அறிமுகமானர்.
அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு வந்தார். அதன் பின் இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவிற்கு புதிது என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நயன் நடிப்பில் வந்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவின் காதலியாக தமிழில் அறிமுகமானார்.
நடிகை ராசி கன்னா திரைப்பயணம்:
இந்த படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், ஆர்யாவின் அரண்மனை 3 போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர். இருந்தாலும், இவர் அதிகம் தெலுங்கு படங்களில் மட்டுமே தான் நடித்து வருகிறார். அதனால் ராசி கன்னா தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அரண்மனை 4 படம் :
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த அரண்மனை 4 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சுந்தர் சி. இயக்கத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து சுந்தர் சி நான்கு பாகம் எடுத்து இருக்கிறார். இந்த நான்காம் பாகத்தில் தமன்னா, ராசி கன்னா , யோகி பாபு, கோவை சரளா, சுந்தர் சி, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ராசி கன்னா நடிக்கும் படங்கள்:
இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்து இருக்கிறார். தற்போது ராசி இந்தியில் ‘த சபர்மதி ரிப்போர்ட்’, தெலுங்கில் ‘தெலுசு கடா’ போன்ற சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ராசி கன்னா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய சினிமா பயணம் குறித்து கூறியிருந்தது, மகேஷ் பாபுவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை.
ராசி கன்னா பேட்டி:
இதை நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். திரையில் எங்களுடைய ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்து பிரபாஸ் உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவருடைய ‘கல்கி’ படத்தை நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன். தற்போது நான் ‘த சபர்மதி ரிப்போர்ட்’ படத்தில் விக்ராந்த் மாசேயுடன் நடித்து இருக்கிறேன். இது 2002-ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.