100 % காதல் – திரை விமர்சனம்.!

0
2334
100-%-percent
- Advertisement -

சினிமா திரை உலகில் இந்த வாரம் கடுமையான போட்டி நிலவும் என கூட சொல்லலாம். இந்த வாரப் படங்கள் மூலம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்து இருக்கிறது. ஏனென்றால் சைரா நரசிம்ம ரெட்டி, அசுரன், ஜோக்கர் இதனைத் தொடர்ந்து “100% காதல்” என்ற படமும் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ், ஷாலினி பாண்டே, சதீஷ், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் வெளியான100% லவ் படத்தை தான் அதிகாரபூர்வமாக தமிழில் ரீமேக் செய்கிறார்கள். அப்படி என்ன இந்த படத்தில் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-
Image result for 100 kadhal

கதைக்களம்:

- Advertisement -

இந்த 100% காதல் படம் ஷாலினி பாண்டே,ஜி.வி. பிரகாஷ் ஆகிய இருவருக்கும் இடையில் ஏற்படும் காதல் , அதையும் தாண்டி அவர்களை சேரவிடாமல் தடுக்கும் அவர்களின் ஈகோ குறித்த கதைதான்.இந்த படத்தில் கதாநாயகன், கதாநாயகியின் காதலைவிட படத்தின் கிளைமாக்சில் 30 வருடங்களாக பிரிந்து இருந்த அவர்களின் தாத்தா-பாட்டி தங்களின் காதலை உணர்ந்து ஒன்று சேர்வது தான் அட்ராசிட்டி ஆக இருந்தது. ஆனால் என்ன? 2011இல் தெலுங்கில் வெளிவந்த 100! லவ் படத்தை அப்படியே ரீமேக் செய்துள்ளார் சந்திரமௌலி. எட்டு வருடங்களாக காதலும் முறையும், அதற்கான தொழில்நுட்பங்களும் மாறாமல் இருக்குமா? என்ன.

இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் படிப்பின் திலகமாக விளங்குகிறார். படிப்பில் தான் எப்பொழுதும் நம்பர் 1 இடத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் புத்திசாலி மாணவர். எப்ப பார்த்தாலும் படிப்பு படிப்பு படிப்பு என்றே இருப்பார். அவரது வீட்டிற்கு படிப்பதற்காக கிராமத்தில் இருந்து வருகிற முறைப் பெண் தான் ஷாலினி பாண்டே.ஷாலினியும் ஜி.வி. பிரகாஷ் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். ஆனால், ஷாலினிக்கு படிப்பில் சில தடுமாற்றங்கள் ஏற்படுகிறது. அதனால் ஜி.வி. பிரகாஷ் இடம் கற்றுக் கொடுக்க கேட்கிறாள். மேலும், ஜிவி பிரகாஷ் கற்றுக்கொடுத்து அவரை நன்றாக படிக்க வைக்கிறார். கல்லூரியில் நடக்கும் தேர்வில் ஷாலினி ஜி.வி.பிரகாஷை தோற்கடித்து முதலிடத்தில் இருப்பார்.

-விளம்பரம்-
Image result for 100 kadhal

இதனால் ஷாலினி மீது ஜிவி பிரகாஷுக்கு வெறுப்பு வருகிறது. மேலும் அடுத்த தேர்வில் இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டும், மோதிக்கொண்டும் தேர்வு எழுதினார்கள். ஆனால் கல்லூரியில் வேற ஒரு மாணவர்(அஜய் ) முதல் இடம் பெறுகிறார். கடைசியில் அந்த மாணவரை தோற்கடிக்க இருவரும் சேர்ந்து ஒன்றாக படிக்கிறார்கள் .மேலும்,ஜிவி பிரகாஷ் தான் முதலிடத்தில் வருகிறார்.ஹீரோவுக்கு ஒரு கட்டத்தில் கதாநாயகி மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது அதனால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலிக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளவில்லை. அதன் பின் நடக்கும் பார்ட்டியில் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு பிரிகிறார்கள். இதனால் இருவரது குடும்பமும் அதிர்ந்து போய் விடுகிறது. கடைசியில் இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

பிளஸ்:

காதல் படம்,சென்டிமென்ட் படம் என்பதால் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக உள்ளது.

மேலும் படத்தின் தம்பி ராமையாவின் காமெடி அனைவரையும் சிரிக்க வைத்தது.

Image result for 100 kadhal

மைனஸ்:

படத்தை அப்படியே காப்பி செய்யாமல் கொஞ்சம் மாற்றம் கொண்டு வந்து இருந்தால் நல்லா இருக்கும்.

இப்போது இருக்கும் காதல் கதைகளே வேற மாதிரி இருக்கும் .ஆனால், இது செம போரிங் படமாக இருக்கும்.

படத்தில் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு இது ஒரு ஏமாற்றம் தான்.எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கிறது.

பட அலசல்:

இது ஏற்கனவே தமிழில் விஜய், ஜோதிகா நடித்து 2000-ம் ஆண்டுகளில் வெளிவந்த படத்தின் கதையை அப்படியே கொஞ்சம் மாற்றி தெலுங்கில் 100% லவ் என்று எடுத்தார்கள். தற்போது அதையே மீண்டும் ரீமேக் உரிமையை வாங்கி 100% காதல் என தமிழில் படமாக்கி வெளியிட்டிருந்தார்கள். அதற்கு நேரடியாக குஷி படத்தின் உரிமையை வாங்கி இருக்கலாம் என்று கூறி வருகின்றனர். ஆனால், 8 வருடத்திற்கு முன்னாடி நடந்ததை அப்படியே ரீமேக் செய்து போட்டது தான் மக்களுக்கு கொஞ்சம் வருத்தமாக உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement