தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பார் சிவகார்த்திகேயன். இவர் குறுகிய காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்த்து வைத்து இருக்கிறார். தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். அனைவரும் எதிர்பார்த்த மாவீரன் படம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. படத்தில் கரையோரம் வாழ்ந்து வரும் மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள்.அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அரசு கொண்டு செல்கிறது.
ஆனால், அரசு வழங்கிய அந்த அடுக்குமாடி வீடு தரமில்லாமல் இருப்பதால் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் கதாநாயகன் சத்யா குடும்பம் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறது. பின் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சனையில் அரசியலுடைய அதிகாரம் இருப்பதால் கதாநாயகனால் எதுவும் செய்யாமல் போகிறது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கதாநாயகன் தற்கொலை முயற்சியில் இறங்குகிறார்.
View this post on InstagramA post shared by Adimattam VaraikumPoi Alasuvom (@avpa_memes)
அப்போது அவருக்கு பின்னால் ஒரு குரல் கேட்கிறது. அதுவரை என்ன செய்வதென்று புரியாமல் பரிதவித்த கதாநாயகன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். அந்த குரலினால் அவருடைய வாழ்க்கையே மாறுகிறது. அந்த குரல் யார்? கதாநாயகனின் பிரச்சனை தீர்ந்ததா? அரசியலின் அதிகாரம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை. மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். மேலும், இந்த படம் தற்போது வரை 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் சில விஜய் டிவி கலைஞர்களுடன் வெளிநாட்டிற்கு பயணம் செய்த போது அங்கே தன்னுடைய பயம் குறித்து ஜாலியாக பேசிய வீடியோ ஒன்று வைரலாக வருகிறது.
https://www.youtube.com/watch?v=EgQZHehbx2Y
இதில் என்ன கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் 12 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் பேசிய இதே போல வசனம் மாவீரன் படத்திலும் இடம்பெற்று இருக்கிறது இது எதார்த்தமாக படத்தில் அமைந்ததா இல்லை படத்தின் இயக்குனர் சிவகார்த்திகேயனின் இந்த வீடியோவை ஏற்கனவே கண்டு அது படத்திற்கு ஏதுவாக இருப்பதால் அப்படியே வைத்து விட்டாரா என்பதும் தெரியவில்லை






