‘என் வாழ்க்கைக் கனவு நடந்தேறிய நாள்’ – 14 ஆண்டுகள் நிறைவு செய்த சுப்ரமணியபுரம் குறித்து ஜேமஸ் வசந்தன் போட்ட பதிவு.

0
464
james
- Advertisement -

90ஸ் கிட்ஸ்களுக்கு பரிட்சியமான பல தொகுப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். தெளிவான தமிழ் பேசும் தமிழ் தொகுப்பாளர்களில் இவருக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சியில் தான். ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் படங்களுக்கு இசை அமைக்க தொடங்கினார். இவர் இசையமைப்பார் என்று தெரிய வந்ததே சுப்ரமணியபுரம் படம் மூலம் தான்.

-விளம்பரம்-

பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். ஆனால், சுப்ரமணியபுரம் படம் ரீச் ஆன அளவிற்கு வேறு எந்த படமும் இவருக்கு புகழை ஏற்படுத்தி கொடுக்கவில்லை. அந்த படத்தில் இடம்பெற்ற மதுர குலுங்க, கண்கள் இரண்டாம் போன்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்த படம் வெளியாகி இன்றோடு 14 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : அமெரிக்காவில் முடிந்த அறுவை சிகிச்சை. எப்படி இருக்கிறார் TR ? மகன் மற்றும் பேரன்களுடன் அவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்.

14 ஆண்டுகள் நிறைவு :

தமிழில் சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தின் மூலம்தான் சசிகுமார் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஜெய் சசிகுமார் சமுத்திரகனி சுவாதி கஞ்சா கருப்பு போன்ற பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்து இருந்தது.

-விளம்பரம்-

ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு :

மேலும், இந்த திரைப்படம் நடிகர் ஜெய்க்கு ஒரு மாபெரும் திருப்புமுனை படமாகவும் அமைந்திருந்தது. நட்பு காதல் மற்றும் துரோகம் போன்றவற்றை மையமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி இன்று 14 வருடங்களை கடந்ததை நினைவு கூர்ந்து இந்த படத்தின் நினைவுகளை தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

கனவு நடந்தேறிய நாள் :

அதில் ’14 வருடங்களுக்கு முன் இதே ஜூலை 4. என் வாழ்க்கைக் கனவு நடந்தேறிய நாள். ‘சுப்ரமணியபுரம்’ படம் வெளியான நாள்கடவுளுக்கும், என் இயக்குனர் சசிகுமாருக்கும், அந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், மக்கள் என்னை இனங்கண்ட ‘கண்கள் இரண்டால்’ பாடலை எழுதிய கவிஞர் தாமரைக்கும், பாடிய தீபா மிரியம் மற்றும் பெள்ளி ராஜுக்கும், அந்தப் பாடலில் பணியாற்றிய இசைக்கலைஞர்களுக்கும், அதைக் கொண்டாடி என்னை இந்த இடத்தில் அமரவைத்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

மீண்டும் இயக்குனராக சசி குமார் :

அதே போல இந்த படம் குறித்து பதிவிட்டு இருக்கும் இந்த படத்தின் இயக்குனர் சசிகுமார் ‘ஜூலை 14 எப்போதும் எனக்கு சிறப்பான நாள் தான். சுப்ரமணியபுரம் 14 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில் தான் வெளியானது. எதோ நேற்று நடந்தது போல் இருக்கிறது. மக்கள் அதை ஏற்றுக்கொண்டதை நினைத்து இன்று வரை தாழ்மையடைகிறேன். விரைவில் இயக்குனராக என்னை நீங்கள் அடுத்த படத்தில் காணாலாம்’ என்று கூறியுள்ளார்.’

Advertisement