ராமானுஜம் படத்திற்கு முன்பாக நடிக்க இருந்த சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தட்டி பறித்த வாரிசு நடிகர் – அட, இந்த படம் தானா.

0
8441
abhinay
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கி 12 நாட்களை கடந்துள்ளது. இதுவரை கடந்த சீசன் களை விட இந்த சீசனில் பல புதிய மாற்றங்களையும், 18 போட்டியாளர்களையும் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இந்த முறை திருநங்கை நமீதா மாரிமுத்துக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாத சில காரணங்களால் நமிதா வெளியேறியது அனைவருக்கும் தெரிந்ததே. வழக்கம்போல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்குள் சலசலப்பும், புகைச்சலும் தொடங்கியது.

மேலும், சில நாட்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லட்டுமா என்ற டாஸ்கில் போட்டியாளர்கள் தங்கள் கடந்து வந்த பாதை குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் அபிநய் தன்னுடைய கடந்து வந்த பாதை குறித்து பேசியது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. அதில் அபிநய் கூறியது, நான் நடித்த முதல் படம் ராமானுஜம் இல்லை. இதற்கு முன்பாக தனக்கு ஒரு பட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ராமானுஜம் திரைப்படம் எனக்குக் கிடைப்பதற்கு ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோரின் பேரன் என்ற பெயரில்தான் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

இது எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. ஏனெனில் படவாய்ப்பு என்னுடைய தாத்தா பாட்டி பெயரில் கிடைத்தது தவிர என்னுடைய திறமையால் இல்லை. அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு முன்பு எனக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பை வேறு ஒரு பிரபல நடிகரின் பேரன் நடித்து விட்டார் என்று வெளிப்படையாகக் கூறி இருந்தார். ஆனால், அந்த நடிகர் யார் என்பதையும், அந்த படத்தின் இயக்குனர் யார் என்பதையும் அபிநய் நேரடியாகக் கூறவில்லை. மேலும் அபிநய் அதே இயக்குனர் என்னை வைத்து படம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று வைராக்கியமாக கூறியிருந்தார்.

Kumki Movie Gallery - Kumki Movie On Location Photos 27

இவருடைய பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஈர்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அபிநய் கூறிய விஷயம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அபிநய் கூற வந்த நடிகர் யார்? ஒருவேளை அபிநய் கூற வந்த நடிகர் விக்ரம் பிரபுவாக இருக்கலாமா? ஏனென்றால் இவர் நடிகர் நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதுமட்டுமில்லாமல் ராமானுஜம் திரைப்படத்திற்கு முன்பு நடிகர் விக்ரம் பிரபு நடித்த கும்கி படம் வெளியாகி இருந்தது. கும்கி படத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் அபிநய் நடிக்க கமிட் ஆகி இருக்கலாம். அந்த வாய்ப்பை நடிகர் விக்ரம் பிரபு தட்டி படித்து இருக்கலாம் என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஹிட் படமான கும்கி படத்தில் அபிநய் நடித்திருந்தால் அவருடைய சினிமா பயணம் வேற லெவல் இருந்து இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அபிநய் நடிக்க இருந்த படம், அந்த நடிகர், இயக்குனர் யார் என்று உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்கள்.

-விளம்பரம்-
Advertisement