இயக்குனர் செல்வராகவன், தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்களில் வித்தியாசமான கதைகளை எடுக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர், தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் கதை ஆசிரியர் பணியாற்றினார்.அதன் பின்னர் தனுஷை வைத்து 2003 ஆம் ஆண்டு ‘காதல் கொண்டேன்’ படத்தை இயக்கினார் இந்த படம் தனுஷுக்கு ஒரு மிகப்பெரிய துவக்கத்தை கொடுத்தது.அதன் பின்னர் இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது.
அதிலும் இவர், தனுஷை வைத்து எடுத்த ‘புதுப்பேட்டை’ படம் ரசிகர்கள் மத்தியில் அப்போது வரவேற்பைப் பெற தவறவிட்டாலும் இன்றளவும் இப்படம் பேசப்பட்டு வருகிறது. அதே போல காதல் கொண்டேன் படத்திற்கு பின்னர் செல்வராகவன் தனுஷ் மற்றும் சோனியா அகர்வாலை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த திரைப்படம் கைவிடபட்டது. புதுப்பேட்டை படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து ட்விட்டரில் பலரும் #15YearsOfPudhupettai என்ற ஹேஷ் டேக்குகளையும் போட்டு வருகின்றனர்.
இதையும் பாருங்க : என்னோட சேர்த்து பல பேர் இதெல்லாத்தையும் அந்த ஸ்கூல்- ல Face பண்ணிருக்கோம் . கௌரி கிஷன் கொடுத்த ஷாக்.
செல்வராகவன் – தனுஷ் கூட்டணி படங்களில் புதுப்பேட்டை படம் தான் இன்றளவும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு கல்ட் கிளாசிக் படமாக இருந்து வருகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் மற்றும் சினேகா நடித்து இருந்தனர். இதில் சினேகாவின் கதாபாத்திரம் பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் சினேகா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் தனக்கு தான் வந்தது என்று நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
வீடியோவில் 6 : 55 நிமிடத்தில் பார்க்கவும்
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், காயத்ரி 16வயது இருக்கும் போதே ‘சார்லி சாப்ளின்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானாராம். அதன் பின்னர் இவருக்கு புதுப்பேட்டை படத்தில் ஸ்னேகா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். அதற்கு டெஸ்ட் ஷூட் எல்லாம் கூட எடுத்த நிலையில் பின்னர் அந்த படம் 6 மாதம் கழித்து தான் எடுக்கப்படும் என்று செல்வராகவன் சொன்னதால் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டாராம் காயத்ரி. அவ்வளவு ஏன் யூத் படத்தில் வந்த ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு சிம்ரனுக்கு முன் இவருக்கு தான் வாய்ப்பு வந்ததாம்.