தனது பள்ளியில் சந்தித்த பிரச்னைகள் பற்றி நடிகை கெளரி கிஷன். அவரே போட்ட பதிவு.

0
90124
gouri
- Advertisement -

சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பல சிறுமிகள், தங்களுக்கு நேர்ந்த துயரமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான கௌரி கிஷன் தனது பள்ளியில் நடைபெற்ற சில கசப்பான அனுபவங்கள் குறித்து தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தமிழில் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன், 96 படத்தை தொடர்ந்து மாஸ்ட்டர் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை கௌரி கிஷன், தான் பள்ளியில் படிக்கும் போது தனக்கும் இவ்வாறான பிரச்சனை நடந்துள்ளது என்று புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதையும் பாருங்க : 9 ஆண்டுகளுக்கு முன்னரே PSBB பள்ளயில் பலியான கைதி பட நடிகரின் 9 வயது மகன். மறக்கப்பட்ட சோக கதை.

- Advertisement -

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நான் பள்ளியில் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ – மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை மாணவ-மாணவியர் மீது சுமத்துவது போன்ற கொடுமைகளைநான் மட்டுமல்லாது என்னுடன் படித்த அனைவரும் எதிர்கொண்டனர்.

மேலும், அந்த பள்ளியில் தற்போது படிக்கும் மாணவிகளும் இது போன்ற பிரச்சனைகளை அனுபவித்தால் தயங்காமல் சொல்லுங்கள்  உங்களின் பெயர்களை வெளியே சொல்லாமல் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறேன் என்று கூறியுள்ளார் கௌரி கிஷன். மேலும், தயவு செய்து பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரராக பேசுங்கள், இந்து பள்ளி அடையார் என்ற ஹேஷ் டேக்கையும் போட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement