’16 வயதினிலே’ படத்தில் சப்பாணியும் – மயிலும் சேர்ந்தார்களா? இல்லையா? – விடையை தனது இரண்டாம் படத்தில் காட்டியுள்ள பாரதி ராஜா.

0
202
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் வசூலில் கோடிக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது. இவர் “மாநகரம்” என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சஸை கார்த்தி நடித்த “கைதி” படத்தின் மூலம் தொடங்கினார். அதற்கு பிறகு வந்த மாஸ்டர், விக்ரம் என பெரிய நடிகர்களை வைத்து பிரம்மாண்ட அளவில் ஹிட் கொடுத்துள்ளார் லோகேஷ். இந்த படங்களில் எல்லாம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சஸை பயன்படுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” படத்தை இயக்கி இருந்தார்.

- Advertisement -

லோகேஷ் எல் சி யு படம்:

இந்த படம் அதிரடி ஆக்சன் படம். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படமும் எல் சி யு என்று கூறப்படுகிறது. இப்படி லோகேஷ் எல் சி யு படம் எடுக்க ஆரம்பித்த பிறகு தான் பலருமே எல்சியூ படத்தை எடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஏற்கனவே எல் சி யு படத்தை பாரதிராஜா எடுத்திருக்கிறார் என்ற தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதிராஜா யுனிவர்ஸ் :

அதில், பாரதிராஜா இயக்கத்தில் முதன் முதலில் வெளிவந்த படம் 16 வயதினிலே. இந்தப் படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ரஜினி பரட்டை என்ற கதாபாத்திரத்திலும், கமல் சப்பானி என்ற கதாபாத்திரத்திலும், ஸ்ரீதேவி மயில் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். படத்தில் மயில் ஆசிரியராகவும், நல்ல படித்தவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

-விளம்பரம்-

16 வயதினிலே படம்:

சப்பானி மயிலை விரும்புகிறார். வில்லனாக பரட்டை ரஜினி நடித்திருக்கிறார். மயிலை அடைய வேண்டும் என்று பரட்டை நினைக்கிறார். எப்படியோ சப்பாணி, பரட்டையை கொன்று மயிலை காப்பாற்றி விடுகிறார். இறுதியில் மயிலை போலீஸ் கைது செய்து செல்கிறது. அப்போது ரயில்வே ஸ்டேஷனில் மயில், சப்பானி வரும் வரை வாழ்நாள் முழுவதும் காத்திருப்பேன் என்று கூறுகிறார். அவர்கள் சேர்ந்தாரா? இல்லையா? என்பது தெரியாது. பின் பாரதிராஜா தன்னுடைய இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயிலில் ஒரு காட்சியில் மொய் கொடுக்கும் சீன் வரும்.

அப்போது யுனிவர்ஸ் கான்சப்ட் :

அதில் பொட்டி கடை மயிலின் கணவர் சப்பானியின் மொய் என்று சொல்லுவார்கள். அப்போது மயிலை சப்பாணி திருமணம் செய்து இருக்கிறார். இவர்கள் இருவரும் பொட்டி கடை வைத்து நன்றாக வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். மொய் கொடுக்கும் அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்கிறது. ஆக மொத்தம் 16 வயதினிலே படத்திற்கான தீர்வை இரண்டாவது கிழக்கே போகும் ரயில் பாரதிராஜா சொல்லி இருக்கிறார். இதுதான் உண்மையான BCU என்று கூறுகிறார்கள்.

Advertisement