40 வருஷத்துக்கு முன்னே வந்த கமல்ஹாசனின் Spin Off மூவி – பலே இயக்குனர்பா இவரு. இதோ அந்த காட்சி.

0
780
bharathiraja
- Advertisement -

40 வருடங்களுக்கு முன்பே கமலஹாசன் மல்டிவெர்ஸ் படத்தில் நடித்திருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் உலக நாயகனாக ஜொலித்து கொண்டு இருப்பவர் கமலஹாசன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இருந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள். மேலும், இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.

இதையும் பாருங்க : தற்போது பிரம்மாண்ட வீட்டில் வாழ்ந்து வரும் செந்திலில் பிறந்து வளர்ந்த கிராமத்து வீடு – தற்போதும் பாதுகாத்து வரும் செந்தில்.

- Advertisement -

விக்ரம் திரைப்படம்:

இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் கமல் ரொம்ப எமோஷனலாக இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான். அதோடு இந்த மாபெரும் வெற்றிக்கு கமல் படக்குழுவினருக்கு பரிசு கொடுத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் கமலஹாசன் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் மற்றும் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த கைதி ஆகிய படங்களின் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் மல்டிவெர்ஸ் என்ற கான்செப்டில் உருவாகியுள்ளது. இதை சிலர் கிராஸ் ஓவர் ஜானர் என்றும் கூறுகின்றனர்.

கிராஸ் ஓவர் ஜானரில் கமல் நடித்த படம்:

அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் பல புதுமைகளை செய்து வந்த கமலுக்கு தற்போது வெளிவந்துள்ள விக்ரம் படமும் அப்படி ஒன்றாகத்தான் அமைந்து இருக்கிறது என்று விமர்சகர்கள் கூறி இருக்கின்றனர். இந்த நிலையில் இதுபோன்ற கிராஸ் ஓவர் ஜானரில் கமல் நடித்து இருந்த படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியான படம் 16 வயதினிலே. இந்த படத்தில் கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீதேவி நடித்திருப்பார்கள். இந்த படம் அதே பாரதிராஜா இயக்கத்தில் அடுத்ததாக வெளியான கிழக்கே போகும் ரயில் படத்துடன் க்ராஸ்ஓவர் ஆகி இருக்கிறது. அதுஎன்னவென்றால்,

-விளம்பரம்-

16 வயதினிலே படம்:

16 வயதினிலே படத்தின் கிளைமாக்சில் ரஜினியை கொலை செய்த வழக்கில் கமலஹாசன் சிறைக்கு சென்று விடுவார். அவர் மீண்டும் திரும்பி வருவார் எனும் நம்பிக்கையில் ஸ்ரீதேவி ரயில் நிலையத்தில் காத்து நிற்பது போல அந்த படம் முடிவு பெற்றிருக்கும். ஆனால், அவர் சிறையில் இருந்து திரும்பி வந்தாரா? அவர்களுக்குள் திருமணம் நடந்ததா? என விஷயங்கள் அதில் காட்டப்படவில்லை. ஆனால், அடுத்ததாக பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தில் அதற்கான பதிலை வைத்து இருந்தார். கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒரு காட்சியில் விருந்துக்கு மொய் வைப்பது போல ஒரு காட்சி அமைந்திருக்கும்.

கிழக்கே போகும் ரயில் படம்:

அப்போது குழாய் ரேடியோவில் “பெட்டிக்கடை மயில் புருஷன் சப்பாணி 5 ரூபா” என்று ஒலிக்கும். அதாவது சிறைக்கு சென்ற சப்பானி திரும்பி வந்து மயிலை திருமணம் செய்து கொண்டது போல அந்த காட்சி அமைந்திருக்கும். அதேபோல இந்த படத்தின் தொடக்கக் காட்சியில் கூட ரயில் வருவது போல தான் அமைந்திருக்கும். இந்த சுவாரசியமான விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே கமலின் படம் ஒன்று இதேபோல கிராஸ் ஓவர் மல்டிவெர்ஸ் கான்செப்டில் இடம்பெற்றிருக்கிறது.

Advertisement