தற்போது பிரம்மாண்ட வீட்டில் வாழ்ந்து வரும் செந்திலில் பிறந்து வளர்ந்த கிராமத்து வீடு – தற்போதும் பாதுகாத்து வரும் செந்தில்.

0
642
senthil
- Advertisement -

காமெடி நடிகர் செந்திலின் சொந்த ஊர் மற்றும் வீடு குறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் எவர் கிரீன் நகைச்சுவை நடிகராக விளங்கியவர் செந்தில். சினிமா உலகில் நகைச்சுவை பார்ட்னர்ஸ் என்று கேட்டாலே சின்ன குழந்தை கூட கவுண்டமணி- செந்தில் என்று தான் சொல்லும். அதேபோல் தமிழ் சினிமா உலகில் காமெடி என்றால் முதலில் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி– செந்தில் காம்போ தான். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி படங்கள் எல்லாம் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
ஆரம்பத்தில் வாழ்ந்த வீடு

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. காலங்கள் மாற மாற இவர்களுடைய பயணமும் மாறிவிட்டது. இருந்தாலும் இப்போது வரை தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி –செந்தில் காம்போவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவர்களுடைய காமெடிக்கு அடிச்சுக்க இன்னும் யாரும் வரவில்லை என்று தான் சொல்லணும். அப்போதெல்லாம் இவர்களுடைய நகைச்சுவைக்காகவே படம் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் குவியும்.

- Advertisement -

செந்தில் கடந்து வந்த பாதை :

மேலும், நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்கள் முதன் முதலாக மதுபான கடையில் தான் பணிபுரிந்தார். பின் நாடகங்களில் சேர்ந்து நடிக்க தொடங்கி இருந்தார். அதற்கு பிறகு வெளியான மலையூர் மம்முட்டியான் என்ற படம் தான் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் நடித்து இருந்தார். இதனிடையே 1984 ஆம் ஆண்டு நடிகர் செந்தில் அவர்கள் கலைச் செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கிராமத்தில் இருக்கும் பண்ணை வீடு

செந்திலின் குடும்பம் பற்றய தகவல்:

இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பிரபு என்ற இரு மகன்கள் உள்ளார்கள். இவருடைய மூத்த மகன் மணிகண்ட பிரபு ஒரு பல் மருத்துவர். இவர் சொந்தமாக சாலிகிராமத்தில் மருத்துவமனையை வைத்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு ‘உன்னை எனக்கு பிடிச்சிருக்கு’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார். ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை அந்த படம் அப்படியே நின்றுவிட்டது.

-விளம்பரம்-

செந்தில் நடித்த கடைசி படம்:

இன்னொரு மகன் சினிமாட்டோகிராபி படித்து இருக்கிறான். மேலும், கவுண்டமணி உடல்நிலை காரணமாக சினிமா பக்கம் வருவது இல்லை என்றாலும் செந்தில் மட்டும் அவ்வப்போது கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக 2019ஆம் ஆண்டு வெளியான பிஸ்தா என்ற படத்தில் செந்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு செந்தில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில் தன்னுடைய பேத்தியுடன் சேர்ந்து செந்தில் செய்த காமெடி டப்ஸ்மாஷ் வீடியோ சோஷியல் மீடியாவில் பயங்கரமாக வைரலாகி இருந்தது.

செந்திலின் சொந்த ஊர்,வீடு:

இந்த நிலையில் செந்திலின் சொந்த ஊர் மற்றும் வீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சென்னையில் சொந்தமாக வீடுகட்டி தன்னுடைய மகன்களுடன் செந்தில் வசித்து வருகிறார். இருந்தாலும், செந்திலுக்கு சொந்த ஊரிலும் வீடு உள்ளது. தன்னுடைய பழைய வீட்டை செந்தில் அப்படியே பாதுகாத்து வருகிறார். இவருடைய வீடு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இளஞ்செம்பூர் என்ற இடத்தில் இருக்கிறது. தற்போது அவர் வளர்ந்து வாழ்ந்த வீட்டின் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

Advertisement