18yearsofGhilli – செட்ல அடிக்கடி என்னை கூப்பிட்டு அந்த டயலாக்கைப் பேசச் சொல்லுவார். கில்லி பட அனுபவத்தை பகிர்ந்த அரிசிமூட்டை ஜெனி.

0
300
Jeni
- Advertisement -

இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி. இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றிருந்தது. எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கும் ஒரு இடம் உண்டு. மேலும், கில்லி திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் விஜயின் தங்கையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் ஜெனிபர். கில்லி படத்திற்கு முன்னதாகவே விஜய்யின் நேருக்கு நேர் படத்தில் ஜெனிபர் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஆனால், இவருக்கு பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்து கில்லி திரைப்படம் தான். இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இவர் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்த படத்தை அடுத்து இவர் தீயா வேலை செய்யணும் குமாரு, பேரான்மை போன்று சில படத்தில் நடித்துள்ளார். பின் சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். சீரியல்களில் வில்லியாகவும், பாசிட்டிவ் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

- Advertisement -

ஜெனிஃபர் திரைப்பயணம்:

அதோடு எல்லா சேனல்களிலும் கிடைக்கும் ரோல்களில் ஜெனிஃபர் நடித்து வருகிறார். இவர் நடிப்பு, நடனம், நகைச்சுவை என அணைத்து திறைமைகளை கொண்டவர். இருந்தாலும் சமீப காலமாக அம்மணிக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைத்த பாடில்லை. இறுதியாக சன் தொலைக்காட்சியில் ஸ்டார் வார் என்ற ரியாலிட்டி ஷோவில் ஜெனிபர் பங்குபெற்றார். மேலும், இவர் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தான் எடுக்கும் போட்டோஷூட் புகைப்படம், வீடியோ என்று எதையாவது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

கில்லி படம் குறித்து ஜெனிஃபர் அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் ஜெனிபர் அவர்கள் கில்லி பட அனுபவம் குறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, கில்லி படம் வெளியாகி 18 வருடங்கள் ஆகிவிட்டது. அந்த படம் தான் எனக்கு சினிமா உலகில் அங்கீகாரம் கொடுத்தது. பல பேர் இன்னும் கில்லி படத்தை பார்த்து விட்டு என்னை பாராட்டுவார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இத்தனை வருடம் ஆனாலும் கில்லிபடம் இன்னைக்கு வரைக்கும் நான் மறந்ததில்லை. மறக்கவும் மாட்டேன். ரொம்ப ஸ்வீட்டான நினைவுகள் நிறைய இருக்கிறது. அதற்கு முதலில் தரணி சாருக்கு நன்றி சொல்லி ஆகணும். விஜய் சார் நிஜமாகவே என்னிடம் தங்கிப் மாதிரிதான் பழகினார். என்னை அவருடைய சொந்த தங்கச்சி மாதிரி பார்த்துக் கொண்டான்.

-விளம்பரம்-

விஜய் குறித்து ஜெனிஃபர் கூறியது:

அண்ணன் தங்கச்சி பாண்டிங் தான் எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இருந்தது. நான் செட்டில் யார்கிட்டயும் நானாக போய் பேச மாட்டேன். ஏன்னா, அவர்களுக்கான ஸ்பேஸ் கொடுக்கணும் என்று யாரையும் தொல்லை பண்ண மாட்டேன். ஆனால், விஜய் சாரே வந்து என்கிட்ட பேசினார். சொல்லப்போனால் செட்டில் எல்லார்கிட்டயும் அவர் பேசுவதை விட என்னிடம் ஸ்பெஷலாக பேசி இருக்காரு. நேருக்கு நேர் படத்தில் நாங்கள் சேர்ந்து பண்ணியது அவருக்கு ஞாபகம் இருந்தது. அதனால் தான் அவர், இந்த பொண்ணு நல்லா நடிக்கும் என்றும் சீன் பண்ணும் போது இப்படி பண்ணலாம்னு எக்ஸ்ட்ராவா சொல்லிக் கொடுப்பார். அதோடு படத்தில் தரணி சாரும், விஜய் சாரும் எக்ஸ்ட்ராவா சில விஷயங்கள் பண்ண வைத்தார்கள்.

கில்லி பட வாய்ப்பு கிடைத்தது:

எனக்கு பர்சனலாக விஜய் சார் ரொம்ப லக்கி. அவருடன் நடித்த நேருக்கு நேர் படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் எனக்கு கிடைத்தது. அதற்கு பிறகு கில்லி படம் தான் இன்னைக்கு எனக்கு அடையாளமாக இருக்கிறது. நான் நடிப்பை என்னைக்குமே விடப்போவதில்லை. விஜய் சாரும் நிச்சயம் நடிப்பை விட மாட்டாரு. அவருடன் சேர்ந்து நிச்சயம் மீண்டும் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதோடு கில்லி பட வாய்ப்பு தேடிபோய் கிடைத்த வாய்ப்பு கிடையாது. அந்த படத்தில் நடிப்பதற்காக 100 பேரில் ஒருத்தரை செலக்ட் பண்ணி அட்வான்ஸ் கொடுத்து இருந்தார்கள். நாளைக்கு சூட் என்றபோது இன்னைக்கு சாயங்காலம் என்னப்பா ஸ்கூலுக்கு வந்து விஜய் சார் உடைய படத்தில் கூப்பிடுகிறார்கள் என்று சொல்லி கூட்டிட்டு போனார்.

கில்லி பட செட்டில் நடந்தது:

ரெட்டை ஜடை போட்டுக்கொண்டு அப்படியே போனேன். என்னை பார்த்ததும் கண்ணாடி மட்டும் போதும் என்று சொல்லி என்னை ஓகே பண்ணினார்கள். எனக்கு முதல் சூட்டே கிளைமாக்ஸில் அழுவது தான். நான் கிளிசரின் இல்லாமல் அழுததை பார்த்து எல்லோரும் பாராட்டினார்கள். பட வெற்றி விழாவில் விஜய் சார் ரொம்ப நல்லாயிருக்கே என்று பாராட்டினார். ‘டேய் பதிலை சொல்லுடா’ன்னு அந்த படத்தில் நான் சொல்ற டயலாக் விஜய் சாருக்கு ஏன் பிடிக்கும் என்று எனக்கு தெரியாது. செட்டில் அடிக்கடி என்னை கூப்பிடு அந்த டயலாக்கை பேச சொல்லுவார். கில்லி எந்த அளவுக்கு அங்கீகாரம் கொடுத்ததோ, அந்த அளவுக்கு பிற வாய்ப்புகளும் தவறியது. இந்தப் படத்தினால் தான் என்று நான் சொல்லமாட்டேன். கில்லி படத்திற்கு பிறகு எனக்கு தங்கச்சி கதாபாத்திரமே தொடர்ந்து வந்தது. ஆனாலும், அந்த கதாபாத்திரம் எல்லாம் என்னை மக்கள் மனதில் பதியவில்லை. பெரிய அளவில் ரசிகர்களை கொடுத்த திரைப்படம் என்றால் அது கில்லி மட்டும்தான் என்று கூறினார்.

Advertisement