2.0 படத்தில் எமி ஜாக்ஸனுக்கு டப்பிங் பேசியது இந்த படத்தின் நடிகை தான்..!

0
569
Amy-jackson

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் தயாரான 2.0 திரைப்படம் நேற்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ள இந்த இந்திய சினிமாவின் அடுத்த கட்ட படம் என்று போற்றப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷேய் குமார், ரியாஸ் கான், கைஸாட் கோட்வால்,மயூர் பனிஸ்வால் போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். 545 ரூபாய் கோடி செலவில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை எமி ஜாக்சன் ஒரு ரோபோவாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகை எமி ஜாக்ஸனுக்கு டப்பிங் பேசியது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை பிரபல டப்பிங் கலைஞசரான ஸ்ரீஜாவின் மகளான ரவீனா என்பவர் தானம். இவர் கடந்த ஆண்டு வித்தார்த் நடிப்பில் வெளியான ‘ஒருகிடாயின்கருணைமனு ‘என்ற படத்தில் கதாநாயகியாகி நடித்துள்ளார்.

viddarth

தற்போது 25 வயது ஆகும் இவர், தனது மூன்று வயதிலேயே டப்பிங் பேச ஆரம்பித்த ரவீனா. மேலும், தமிழ் தெலுகு மலையாளம் என்று பல்வேறு விளம்பர படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். முதன் முதலில் 2012 ஆம் வெளியான ‘சாட்டை ‘ படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக தனது பயணத்தை துவங்கினார்.