2.0 முதல் நாள் முதல் காட்சி..!கை குழந்தையுடன் பார்க்கவந்த ரசிகை..!

0
153
2.0

சிவாஜி,எந்திரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கூட்டணியில் “2.0” திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது . இந்த படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சன், இந்தி நடிகர் அக்சய் குமார், ரியாஸ் கான் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

பிரம்மாண்ட பொருட்ச்செலவில் தயராகி வரும் இந்த படம் முதல் 545 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய அளவுவில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் இது என்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இன்று (நவம்பர் 29) உலகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்கில் வெளியாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை ரசிகர் காட்சியை காண மும்பை திரையரங்கின் முன்பு பெண் ஒருவர் தனது குழந்தையுடன் காத்துக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.