சிட்டி 2.0 ரீ-லோடட் ..!2.0 படத்தின் ஆழமான விமர்சனம்..!

0
1098
2.0
- Advertisement -

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் இன்று (நவம்பர் 29) வெளியாகியுள்ளது. இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தற்போது காணலாம்.

-விளம்பரம்-

படம்:- 2.0
இயக்குனர்:- ஷங்கர்
நடிகர்கள்:- ரஜினிகாந்த, எமி ஜாக்சன், அக்ஷேய் குமார், ரியாஸ் கான், கைஸாட் கோட்வால்,மயூர் பனிஸ்வால்,ஆதில் ஹுசெய்ன்
இசையமைப்பளார் :- ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பு:- லைகா நிறுவனம்
வெளியான தேதி:-29-11-2018

- Advertisement -

2.0

கதைக்களம் :

-விளம்பரம்-

இந்த படத்தின் கதை என்னவென்று ட்ரைலரை பார்த்தே நாம் அனைவரும் கொஞ்சம் யூகித்திருப்போம். ஆம், செல் போனை மையப்படுத்தியே முழு கதையும் நகர்கிறது. படத்தின் ஆரம்பத்தில் ஒரு செல் போன் டவரில் ஒரு நபர் தூக்கு மாட்டிக்கொண்டு தொங்குகிறார். அதன் பின்னர் அடுத்த நாளில் இருந்து மக்கள் பயன்படுத்தும் செல்போன்கள் மாயமாகிறது. இதனை என்னவென்று ஆராய்வதற்குள் பல செல் போன் உரிமையாளர்கள் இறந்து போகின்றனர்.

அப்போது தான் நம் வாசிகரனின் எண்ட்ரி, அவரின் உதவியாளராக இருக்கும் எமி அவரும் ஒரு ரோபோ தான். வசிகரனிடம் செல் போன் மயமானதை பற்றி பேசும் போது அவர் இதுற்கு ஒரே ஆள் சிட்டி தான் என்று முதல் பாகத்தில் அழிந்த சிட்டியை மீண்டும் கொண்டு வருகிறார். ஆனால், சிட்டியும் அக்ஷேய் குமாரின் தீய சக்திக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய் விடுகிறது. ஆம், அந்த செல் போன் டவரில் தூக்கு மாட்டிக்கொண்டது அக்ஷேய் குமார் தான்.

அதன் பின்னர் அந்த தீய சக்தி எப்படி உருவானது என்பதை விவரிக்க அக்ஷேய் குமாரின் பிளாஷ் பேக் ஒன்று வருகிறது. அதன் பின்னர் அக்ஷேய் குமார் செல் போன் உருவத்தில் மாறி மாறி பல கொலைகளை செய்து வருகிறார். இதனை கட்டுப்படுத்த சிட்டிக்கு ரெட் சிப் பொருத்தி அக்ஷேய் குமாருடன் மோதவிடுகிறார் வசீகரன். இறுதியில் 2.0 சிட்டி அந்த தீய சக்தியை அழித்தாரா இல்லையா என்பதை பல மாயாஜால கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் காண்பித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

படத்தை பற்றி அலசல் :

நாம் அனைவரும் எதிர்பார்த்தது போல படத்தில் முழுக்கு முழுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் தான் நிரம்பி வழிகிறது. அதிலும் 3d மற்றும் 4d சௌண்டில் படத்தை பார்த்தல் நிச்சயம் ஹாலிவுட் படத்தை பார்த்த ஒரு திருப்தி இருக்கும். படத்தில் முழுக்க முழுக்க ரஜினி தான் அசத்தியுள்ளார். வில்லனாக வரும் அக்ஷேய் குமார் முக்கால் வாசி காட்சிகள் கிராபிக்ஸ் கட்சியில் தான் வருகிறார். எமி ஜாக்ஸன் இந்த படத்தில் ரோபோவாக நடித்திருக்கிறார் ஆனால், டம்மி தான் அவருடைய ரோல். படத்தின் முழு பலம் கிராபிக்ஸ் காட்சிகள் தான், அதனை ஹாலிவுட் தரத்தில் செய்துள்ளனர். வசீகரன்,சிட்டி என இரண்டிலுமே ரஜினி ஸ்கோர் செய்கிறார். எனினும் ரசிகர்களை அதிகமாகக் கவர்வது வெர்ஷன் 2.O வாக வரும் சிட்டி தான்.ஏ ஆர் ரகுமானின் இசை வழக்கம் போல மாஸ் தான்.

ப்ளஸ் :

படத்தின் ப்ளஸ் என்றால் VFX தான் , அதனை மட்டும் முழுக்க நம்பாமல் ஷங்கர் தனது கற்பனை திறன் அனைத்தையும் பயன்படுத்தி அற்புதம் செய்துள்ளார். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் ரோபோக்கள் மற்றும் செல் போன்கள் உருமாறும் காட்சிகளை எல்லாம் மனுஷன் எப்படி தான் யோசித்தரோ. வழக்கம் போல ரஜினி பேசும் வசனங்கள் அணைத்தும் அவரது ரசிகர்களை விசிலடிக்கவைத்து விடுகிறது. ரஜினியை இவ்வளவு இளமையாக காண்பிக்க முடியும் என்றால் அது என்னால் மட்டும் தான் முடியும் என்று நிரூபித்துள்ளார் ஷங்கர்.

மைனஸ் :

படத்தில் பெரிய மைனஸ் எதுவும் இல்லை என்றாலும் சின்ன சின்ன லாஜிக் மீறல்கள் மற்றும் தேவை இல்லாத காட்சிகள் கொஞ்சம் இருக்கிறது. முதல் பாதியில் வில்லனாக வரும் போராவின் மகன் எதற்காக வருகிறார் என்றே தெரியவில்லை. மேலும், அக்ஷேய் குமாரை கொடூரமாக காட்டிவிட்டு பிளாஷ் பேக்கிள் சாதுவாக காண்பித்திருப்பது கொஞ்சம் இடிக்கிறது(சாது மிரண்டால் காடு கொள்ளாதோ). படத்தில் ஒரு சில கதாபாத்திரங்களின் வசன உச்சரிப்பு டப்பிங் படம் பார்ப்பது போல் இருக்கும். இதுக்கு தான் தமிழ் தெரிஞ்ச நடிகர்களை போடணும் என்று தான் தோன்றுகிறது. ஏ ஆர் ரகுமானின் இசை ஒரு சில இடத்தில் சத்தமாக உணர வைக்கிறது. சௌண்ட கொஞ்சம் கம்மி பண்ணுங்க பாஸ்.

மார்க் :

மொத்தத்தில் வழக்கம் போல இது ஷங்கரின் ஒரு பிரம்மாண்ட படைப்பு எல்லோரும் சொல்வது போல இந்திய சினிமாவின் அடுத்த லெவல்.இந்த படத்திற்கு Behind Talkies அளிக்கும் மதிப்பு 8/10.

Advertisement