பிரம்மாண்டத்தின் உட்சம்.! ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2.0 – Official Teaser

0
763
yenthiran
- Advertisement -

டீசரை காண மாநிலம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் 3டியை பார்க்க தியேட்டருக்கு தான் சொல்லவேண்டுமா என்ன?
ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘2.0’ படத்தின் 3D டீஸர் செப்டம்பர் 13 வெளியாகவுள்ளது. இந்த டீசரைக் காண மாநிலம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் 3டி விடீயோக்களை காணத் தியேட்டருக்கு தான் சொல்லவேண்டுமா என்ன?

-விளம்பரம்-

- Advertisement -

உண்மையில் இதற்கு அதைத்தவிரவும் பல வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்பதற்கு முன், 3டி தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது எனச் சுருக்கமாக பார்க்கலாம். ஒரு கண்ணை மூடி மற்றொரு கண்ணில் மட்டும் பார்த்தாலே இரண்டு கண்களில் தெரியும் காட்சியில் சிறிய வேறுபாடுகள் இருப்பது உங்களுக்குப் புரியும். இரண்டு கண்களிலும் ஒன்றாகப் பார்க்கும்போது அந்த இரு காட்சிகளையும் நம் மூளை ஒன்று படுத்தி நமக்கு நமது 3டி காட்சியை அளிக்கிறது. இந்தப் பிம்பத்தை தான் 3டி தொழில்நுட்பமும் கொண்டுவர முயல்கிறது. இதைப் பலமுறைகளில் கொண்டுவர இயலும்.

அந்தக் காலத்து 3டி கண்ணாடிகள் ஞாபகம் இருக்கிறதா? சிவப்பு-ஊதா நிறத்தில் இருக்குமே அது தான். அதில் இரண்டு நிறங்களின் வழியே பார்க்கும் போது ஒவ்வொரு கண்ணுக்கும் வேறொரு காட்சி தெரியும். இதை நமது மூளை ஒன்றுபடுத்துவதால் நமக்கு அது மொத்தமாக ஒரு 3டி காட்சியாய் தோன்றும். ஆனாலும் இந்த முறையில் பல நிறங்கள் தெரியாமல் போய்விடும். அனாகில்ஃப் 3டி எனப்படும் இந்த முறை பத்து பேரில் ஒன்பது பேருக்கு தான் சரியாக தெரியும் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதாவது இரண்டு கண்களிலும் சீரான பார்வை இருந்தால் தான் இதை ஒழுங்காகப் பார்க்க இயலும். யூடியூப்பிலேயே மேலே கூறிய முறையில் 3டியை காண முடியும். ஏதேனும் 3டி விடியோவை ( HD போன்று இந்த விடியோக்களிலும் இது தனியாக குறிப்பிடப்பட்டிருக்கும்) செலக்ட் செய்துகொண்டு, ‘Anaglyph’ என்ற மோடிற்கு மாறினால் போதும். பின்பு இந்த முறையில் வீடியோ ஒளிபரப்பாகும். இந்த சிவப்பு-ஊதா கண்ணாடிகள் பேப்பரில் செய்யப்பட்டு மிகச் சொற்ப விலைகளில் கிடைக்கும்.

-விளம்பரம்-
Advertisement