நான் வேற மெட்டை போட்டு தரேன்னு சொன்னேன் எஸ் ஜே சூர்யா தான் வேண்டும் என்றார் – குஷி பாடலின் சீக்ரெட் சொன்ன தேவா.

0
4180
deva
- Advertisement -

இயக்குனர் எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த குஷி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தளபதி விஜய், ஜோதிகா, விஜயகுமார், மும்தாஜ், விவேக் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்துக்கு தேவா இசையமைப்பாளராக இருந்தார். இந்தப் படத்தின் பாடல்களும் அமோக வரவேற்பைப் பெற்றன. இந்த குஷி படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல்கள் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் தேவா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, என் சினிமா வாழ்க்கையில் குஷி படம் ஒரு மைல்கல் அமைந்தது.

-விளம்பரம்-

நான் கானா இசையமைப்பாளர் என்ற எண்ணத்தை இந்த படம் உடைத்து. எஸ்.ஜே.சூர்யா கதை சொல்லும் விதம் வேற லெவல். மேகம் கருக்குது என்ற பாடலுக்கான சூழலை எஸ்.ஜே.சூர்யா அழகாக சொன்னார். அதற்கு நான் ஒரு சாதரணமான மெட்டைத்தான் கொடுத்தேன். எனக்கு அது மிகச் சாதாரணமாக இருந்தது. இன்னும் சிறப்பாக கொடுக்கலாமே என்று நினைத்தேன். ஆனால், எஸ்ஜே சூர்யாவுக்கு அந்த மெட்டு பிடித்தது. அதோடு நாங்கள் இருவரும் வாலி படத்தில் ஏற்கெனவே பணியாற்றியிருந்தோம்.

இதையும் பாருங்க : முதுகில் இவ்வளவு பெரிய டாட்டூவை குத்தியுள்ள நடிகை லட்சுமி மேனன். வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

அதனால் அவர் சொன்னது போலவே பாடலை வைத்தோம். அந்த பாடலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. இன்று கூட நான் ஒரு பாடலுக்கு மெட்டமைக்கும்போது எஸ்ஜே சூர்யாவை அழைக்கலாமா என்று நினைப்பேன். அதிலும் கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற பாடலுக்கு எஸ்ஜே சூர்யாவும் சில சப்தங்களைக் கொடுத்திருந்தார். குஷி பாடல்களின் வெற்றிக்கு பாடகர்கள் ஹரிஹரன், சங்கர் மஹாதேவன், ஹரிணி, அனுராதா ஸ்ரீராம், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோரும் முக்கியக் காரணம்.

மேலும், மொட்டு ஒன்று, ஓ வெண்ணிலா பாடல்களில் முறையே மைக்கேல் ஜாக்சன் மற்றும் ஒரு போர்த்துகீசிய பாடலின் தாக்கம் இருக்கும் எந்த இசையமைப்பாளருக்குமே இன்னொருவர் போட்ட மெட்டை அப்படியே போடுவதில் உடன்பாடு கிடையாது. அதற்குப் பதில் புதிதாக ஒரு மெட்டை உருவாக்கத்தான் விரும்புவார்கள். ஆனால், சில நேரங்களில் இயக்குனர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த பாடல்கள் சில தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கூறினார். மொட்டு ஒன்று, ஓ வெண்ணிலா பாடல்கள் மைக்கேல் ஜாக்சன் மற்றும் ஒரு போர்த்துகீசிய பாடலின் தாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement