தென்னிந்திய திரையுலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.
இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2016ம் ஆண்டு வெளி வந்தது. அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார்.தற்போது இவர் சோஷியாலஜி பட்டப் படிப்பை படித்து வருவதாகவும்தெரிவித்திருந்தார்.
படிப்பை முடித்து விட்டு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.. தற்போது லட்சுமி மேனன் அவர்கள் இயக்குனர் முத்தையா இயக்கும் புது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்திற்கு சிப்பாய் என்று பெயர் வைத்து உள்ளார்கள்.
கௌதம் கார்த்திக் மற்றும் லட்சுமி மேனன் நடிக்கும் இந்த புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகை மேனன் தனது முதுகில் குத்திய டாட்டூ ஒன்றை காண்பித்து இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.