தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து பின்னர் ஹீரோவான பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரான எஸ் ஜே சூர்யாவும் ஒருவர். எஸ் ஜே தமிழில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார். அதிலும் இவர் இயக்கிய குஷி மற்றும் வாலி திரைப்படங்கள் வேற லெவலில் வெற்றிபெற்றது. வாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் விஐய்யை வைத்து குஷி படத்தை இயக்கி இருந்தார். வாலி படத்தை போன்று இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த படத்தில் ஜோதிகா, மும்தாஜ், விவேக், விஜயகுமார் என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படத்திற்கு தேவா தான் இசையமைத்து இருந்தார். விஜய் படங்களில் முதன் முறையாக அதிக வசூல் செய்தது இந்த திரைப்படம் தான். இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 21 வருடங்கள் ஆனதையொட்டி ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் #21YearsOfEvergreenKushi என்ற ஹேஷ் டேக்கை போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் பாருங்க : கோவையில் ‘கொரோனா தேவி’ கோவில் – கட்டனவர் யார் தெரியுமா ? அதுக்கு அவர் கொடுத்த விளக்கத்தை கேளுங்க.
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் போது நடந்த ஸ்வாரசியான விஷயத்தை பற்றி பார்க்கலாம். அது என்னவென்றால், குஷி படத்தின் கதையை விஜய்யிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டார் எஸ்.ஜே. சூர்யா. பின் அவர் பத்திரிக்கைகளை சந்திக்கும் ஏற்பாடு ஒன்றை ஏற்பாடு செய்தார்.மேலும், அதில் அவர் குஷி படத்தின் கதையை டாப் to பாட்டம் வரை அழகாக அவர்களிடம் கூறி விட்டார். மேலும், இந்த படத்தை எழுதி,நானே இயக்கி உள்ளேன் என்று அறிவித்திருந்தார். மேலும், இந்தத் திரைக் கதைக்கு சமமாக யாராலும் கொடுக்க முடியாது என்று ஓப்பன் சேலஞ்ச் அளித்து இருந்தார்.
ஆனால், என்ன ஒரு நல்ல விஷயம் என்று பார்த்தால் அப்போது எந்த ஒரு சமூக வலைத்தளங்களும் இல்லை. இருந்திருந்தால் படத்திற்கு முன்பே கதையை சொல்லிவிட்டதால் படத்தின் மீது எதிர்பரப்பு குறைந்து பிளாப் ஆகி இருக்கும். அதுமட்டுமல்லாமல் அவருக்கு முன்னரே இந்த படத்தை வேறு யாராவது கூட எடுத்திருந்தது இருப்பார்கள் என்பது தான் உண்மை.