4 நாட்கள் நடித்த நடிகை, வேண்டவே வேண்டாம் என்று விடப்பிடியாய் நின்ற இயக்குனர் – முகவரி படத்தின் சக்ஸஸ் ஸ்டோரி.

0
249
- Advertisement -

ஓர் அறிமுக இயக்குநர் என்றைக்குமே தன்னுடைய முதல் படத்தை மறக்க மாட்டார். அது அவருக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான். அந்த முதல் படத்தில் டாப் நடிகர்கள், டெக்னீஷியர்கள் வேலை பார்த்தால்… படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தால்… இன்னும் ஸ்பெஷலாகத்தானே இருக்கும். வி.இஸட்.துரைக்கு அப்படியான படம்தான் ’முகவரி’. இந்த படம் வெளியாகி இன்றோடு 24 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்த சுவாரசியமான தகவல்களை கொஞ்சம் திரும்பி பாப்போம்.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து காதல் சடுகுடு, தொட்டி ஜெயா, நேபாளி போன்ற பல்வேறு படங்களை இயக்கிய துரை இறுதியாக சுந்தர் சி யை வைத்து இருட்டு என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் துரை. இப்படி ஒரு நிலையால் முகவரி படம் வெளியாகி 24 வருடங்கள் ஆன நிலையில் இந்த படத்தை பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்துரை . அதிலும் குறிப்பாக ஜோதிகா இந்த படத்தில் எப்படி வந்தார்கள் என்பதை கூறியுள்ளார்.

- Advertisement -

அந்தப் பேட்டியில் பேசியுள்ள அவர், பல இயக்குநர்களுக்கு முதல் பட வாய்ப்பு அதிக சிரமங்களுக்குப் பிறகுதான் கிடைக்கும். ஆனால், எனக்கு அப்படியில்லை. ’காதல் கோட்டை’ படம் வருவதற்கு முன்னாடியே அதே மாதிரி ஒரு கதையை லட்சுமி மூவி மேக்கர்ஸ் முரளி சாரிடம் சொல்லியிருந்தேன். அப்போது நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தனால படம் ஆரம்பிக்க தாமதமாச்சு.

கொஞ்ச நாள்ல ’காதல் கோட்டை’ படமும் ரிலீஸாகிடுச்சு. அந்தப் படம் ரீச்சான அதே சமயம், இதே மாதிரி ஒரு கதையை இன்னொரு பையனும் சொல்லிட்டு இருந்தான்னு, நானும் ரீச்சானேன். அப்போது இருந்த டாப் தயாரிப்பாளர்கள் எல்லாரும் என்னை அழைத்துக் கதை கேட்டார்கள். அப்படி நான் சக்கரவர்த்தி சார்கிட்ட சொன்ன கதைதான் முகவரி. ’சூப்பர்யா… இதுதான் உன்னோட முதல் படம்’னு அவர் சொல்லி, எனக்கு கிடைத்ததுதான் ’முகவரி’ வாய்ப்பு.’’அஜித்தான் இந்தப் படத்தில் நடிக்கணும்னு ஒத்த காலில் நின்னேன். அஜித்தை துரத்தி, துரத்தி ஒரு வழியா நடிக்க வெச்சுட்டேன். அவர் கதை கேட்கவேயில்லை.

-விளம்பரம்-

’நான் சக்கரவர்த்தியை நம்புறேன், சக்கரவர்த்தி உங்களை நம்புறார்’னு சொல்லித்தான் படத்தில் நடிக்கவே வந்தார். அப்புறம், ’என்னை இம்ப்ரெஸ் பண்ற மாதிரி படம் எடுங்க. உங்களுக்கு கார் கிஃப்ட் பண்றேன்’னு சொன்னார். ‘கார் எல்லாம் வேண்டாம் சார். உங்க கால்ஷீட்தான் வேணும்’னு சொல்லி இந்தப் படத்தை தொடங்கினோம். ரீரெக்கார்டிங்கின்போது படம் பார்த்த அஜித்,’ நீங்க சொன்ன மாதிரி நல்ல படம் எடுத்துட்டீங்க. இப்போ நான் சொன்ன மாதிரி உங்களுக்கு கார் கொடுக்குறேன்’னு சொல்லி, அப்பவே சாண்ட்ரோ கார் கிஃப்ட் பன்ணினார்.’’

இந்தப் படத்தில் முதலில் கதாநாயகியாக இஷா கோபிகர் தான் கமிட்டாகி இருந்தார்கள். அவர்களை வைத்துதான் முதல் நான்கு நாள் ஷூட்டிங்கும் ஆரம்பித்தோம். அஜித்திற்கு நான்கு நாட்கள் கழித்துதான் ஷூட்டிங் இருந்தது. முதல் மூன்று நாள் எடுத்த காட்சிகளை தயாரிப்பாளர் பார்த்துவிட்டு நல்லா இருக்கிறது இப்படியே போயிடலாம் என்று சொன்னா.ர் ஆனால் எனக்கு ஹீரோயின் செட் ஆகாமல் இருப்பது போன்று தோன்றியது.

இதைப்பற்றி நான் தயாரிப்பாளரிடம் சொன்னேன், என்னப்பா இப்போ வந்து இப்படி சொல்ற அப்படின்னு ஷாக் ஆனார். பின்னர், சார் அவர்கள் நன்றாகத்தான் நடிக்கிறார்கள் ஆனால், இந்த கதாபாத்திரத்திற்கு அவர்கள் சரியில்லாத மாதிரி இருக்கிறது என்று சொல்லி ஜோதிகாவை நான் தான் கமிட் செய்தேன். ஜோதிகா நடித்த முதல் நாள் ஷூட்டிங்கை பார்த்து தயாரிப்பாளரும் என்னுடைய முடிவு சரிதான் என்று பாராட்டினார்கள் என்று கூறி இருந்தார் துரை.

Advertisement