சிவனாக நடித்துள்ள அக்ஷய் குமார் படத்தை பார்க்க படத்தில் நடித்தவருக்கே தடை – இதான் காரணம்.

0
1558
- Advertisement -

அக்‌ஷய் குமார் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் அந்த படத்தில் நடித்த சிறுவனுக்கே படம் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அக்ஷய் குமார். இவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவர் இதுவரை 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இவர் தமிழ் ரீமேக் படங்களில் அதிகம் நடித்திருக்கிறார். அந்த வகையில் தமிழில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியிருந்த காஞ்சனா படத்தின் ரீமேக்கான ஹிந்தியில் லக்ஷமி எனும் படத்தில் இவர் தான் நடித்திருந்தார். தற்போது இவர் சூர்யா நடிப்பில் வெளி வந்திருந்த சூரரைப் போற்று படத்திலும், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ராட்சசன் படத்தின் ரீமேக்கிலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

ஓ எம் ஜி 2:

மேலும், இவர் பாலிவுட்டில் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஓ எம் ஜி 2. இந்த படத்தை பாலிவுட்டில் பிரபல இயக்குனராக திகழும் அமித்ராய் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சிவபெருமானின் அதிபயங்கர பக்தன் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்திருக்கிறார். சிவனின் தூதுவராக பங்கஜ் திரிபாதி நடித்திருக்கிறார். ஆகஸ்ட் 11ஆம் தேதி தான் இந்த படம் வெளியாகி இருக்கின்றது.

ஏ சான்றிதழ் வழங்கியது:

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் இந்திய பள்ளிகளில், பாலியல் கல்வியின் போதனை எப்படி இருக்கின்றது என்பதை விளக்கும் வகையில் இருக்கின்றது. இதனால் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி இருக்கின்றது. மேலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்பதற்காக தான் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

இந்த படத்தை 18 வயது கீழ் உள்ளவர்கள் திரையரங்கில் பார்க்க அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. அதோடு இந்த படம் வெளியானதை தொடர்ந்து வட மாநிலங்களில் இந்த படத்திற்கு எதிராக போராட்டம் செய்திருந்தார்கள். அதோடு ஆக்ராவில் இந்து அமைப்பினர் திரையரங்க வாசலில் போராட்டம் நடத்தி இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் அக்‌ஷய் குமார் மகனாக ஆருஷ் வருமா நடித்திருக்கிறார்.

திரையரங்கில் விதித்த தடை :

இந்த நிலையில் படத்தில் நடித்த ஆருஷ் வருமாவுக்கு இந்த படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கு தடை விதித்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஆருஷ் வருமாவிற்கு 16 வயது ஆவதால், இந்த படத்தை அவரால் திரையரங்கில் பார்க்க முடியாது. மேலும், இது குறித்து அவருடைய உறவினர்கள் கூறியிருப்பது, நாங்கள் குடும்பத்துடன் ஆரூஷின் படத்தை பார்க்க சென்றோம். ஆனால், அவரால் தான் நடித்த படத்தை பார்க்க முடியவில்லை. இது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.

Advertisement