காதல் கோட்டை வெளியாகி 25 ஆண்டுகள் – முதலில் இப்படி ஒரு கிளைமாக்ஸ் தான் இருந்துச்சாம். இத நீங்க ஒத்துப்பீங்களா பாருங்க.

0
4878
kadhal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்கள் காலம் கடந்து வந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் உள்ள படம் தான் அஜித்தின் காதல் கோட்டை படம்.,இந்த படத்தில் அஜித் குமார், தேவயானி, ஹீரா ராசகோபால் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த படத்தை சிவசக்தி பாண்டியன் அவர்கள் தயாரித்து இருந்தார். இன்றும் கூட ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் படமாக உள்ளது. பல்வேரு காதல் கதைகள் படமாக வந்த நிலையில் லெட்டர் மூலம் காதலிக்கும் ஜோடிகளின் ஒரு வித்தியாசமான கதையாக இந்த படம் அமைந்து இருந்தது.

-விளம்பரம்-
Image result for kadhal kottai climax"

இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் வரை ஹீரோ ஹீரோயின் இருவரும் தாங்கள் நேரில் சந்தித்தாலும் ஒருவருக்கு ஒருவர் யார் என்பதை படத்தின் கடைசி நிமிடத்தில் தான் கடுபிடிப்பது போல காண்பித்து இருப்பார் இயக்குனர். ஆனால், “காதல் கோட்டை” படத்தின் கிளைமாக்ஸ் வேற என்று இயக்குனர் கூறி இருந்தார். இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

இதையும் பாருங்க : அர்ச்சனாவின் தற்போதைய நிலை என்ன ? அவரின் மகள் சாரா போட்ட பதிவு.

- Advertisement -

இந்த படத்தின் கிளைமாக்ஸில் அஜித்தும், தேவயானியும் சேர்ந்து விடுவார்கள். ஆனால், படத்தின் உண்மையாக எழுதிய கதையில் அஜித்தும், தேவயானியும் கடைசி வரை சேரமாட்டார்கள். மேலும், இதற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு நெகட்டிவ் கிளைமாக்ஸ் எல்லாம் வேண்டாம், மாற்றிக் கொடுங்கள் என்று இயக்குனர் அகத்தியனிடம் கேட்டாராம்.அதனால் தான் கிளைமாக்ஸ் இருவரும் சேரும் படி வைத்தார்கள் என ஒரு பேட்டியில் இயக்குனர் கூறினார்.

Image result for director agathiyan kadhal kottai"

ஆனால், இருவரும் சேரும் படி வைத்தால் தான் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆட்சி. ஆனால்,இருவரும் பிரிந்து இருந்தால் படம் ஹிட்டா இருக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வி தான். அஜித் நடிப்பில் வெளிவந்த ‘விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் அடைந்தது, இந்த படத்தை தொடர்ந்து தற்போது அஜித் வலிமை படத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

Advertisement