அர்ச்சனாவின் தற்போதைய நிலை என்ன ? அவரின் மகள் சாரா போட்ட பதிவு.

0
8136
archana
- Advertisement -

அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது அம்மாவின் நிலை குறித்து அர்ச்சனாவின் மகள் சாரா ரசிகர்களுக்கு தெரிவித்து இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான அர்ச்சனாவும் ஒருவர். அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் பிக் பாஸ் வீட்டில் அன்பை ஓவராக பிழிந்ததால் தான். அதே போல இவர் தனக்கான ஒரு குரூப்பை அமைத்துக் கொண்டு அவர்களையும் பல இடங்களில் விளையாடவிடாமல் தடுத்து வந்தார் என்று பல்வேறு விமர்சனங்கள் கூட எழுந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-69-1024x801.jpg

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அர்ச்சனா மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனாலேயே இவர் எந்த ஒரு பேட்டியிலும் பங்கேற்கவில்லை. தனது யூடுயூப் சேனலில் மட்டும் வீடியோகளை பதிவிட்டு வந்தார். அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர் தனது மகளுடன் இணைந்து பதிவிட்ட பாத்ரூம் டூர் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அர்ச்சனாவிற்கு எதிராக பல சோலோ யூடுயூபர்கள் விமர்சனத்தை முன் வைத்தனர்.

இதையும் பாருங்க : இந்த பாடலின் வீடியோ ஏன் ரிலீஸ் ஆகல – ஓராண்டிற்கு முன் கிரண் கேட்ட கேள்விக்கு Sj சூர்யா மூலம் கிடைத்த விடை.

- Advertisement -

அதன் பின்னர் எப்படியோ இந்த விவகாரம் ஓய்ந்தது. ஆனாலும், சமூக வலைதளத்தில் இவருக்கு ஹேட்டர்ஸ்கள் குறைந்த பாடில்லை. இருப்பினும் அவர்களை பற்றி கவலைப்படாமல் தனது பணியை செய்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜீ தமிழ் சேனல் பக்கம் செல்லாமல் இருக்கும் அர்ச்சனா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிவருகிறார்.

இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மண்டையோட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக அவருக்கு நேற்று காலை அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாகவும் ஒரு வாரத்தில் வீடு திரும்பி விடுவேன் என்றும் கூறியிருந்தார். மேலும், தன்னைப்பற்றியும் தனது உடல் நலன் பற்றியும் தனது மகள் சாரா தெரிவிப்பார் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

நேற்று அர்ச்சனாவிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் இருக்கும் தனது அம்மாவின் உடல் நிலை குறித்து பதிவிட்டுள்ள அர்ச்சனாவின் மகள், அர்ச்சனா தற்போது சாதாரண சிகிச்சை பிரிவிற்கு வந்துவிட்டார். தற்போது நலமாக இருக்கிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement