சூர்ய வம்சம் படத்தில் குட்டி சக்திவேலாக நடித்தது ஹேமா இல்லை, இவர் தான் – 25 ஆண்டு கழித்து வெளியான உண்மை.

0
274
sooryavamsam
- Advertisement -

90ஸ் ரசிகர்களுக்கு எத்தனையோ கொண்டாடப்படும் குடும்ப படங்கள் இருக்கிறது. அதில் சூர்ய வம்சம் படத்திற்கு நிச்சயம் ஒரு தனி இடம் இருக்கிறது. விக்ரமன் இயக்கத்தில், எஸ்.எ.ராஜ்குமார் இசையமைப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்த படம் 25 ஆண்டுகளை கடந்து இருக்கிறது. இரு வேடங்களில் சரத்குமார், தேவயானி, ராதிகா, பிரியா ராமன், மணிவண்ணன், சுந்தர்ராஜன், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்து இருந்த இந்த படம் சரத்குமாரின் சினிமா வாழ்க்கையில் ஒரு மாபெரும் வெற்றிப்படம் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

தமிழில் வெற்றியடைந்த இந்த படம் பின்னர் தெலுங்கு, இந்தி, கன்னடம் என்று மூன்று மொழிகளில் ரீ மேக் செய்யப்பட்டது. தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடிக்க ‘சூர்யா வம்சம்’ என்ற பெயரிலும், ஹிந்தியில் அமிதாப்பச்சன், சௌந்தர்யா நடிக்க ‘சூர்ய வன்ஷம்’ என்ற பெயரிலும், கன்னடத்தில் விஷ்ணுவர்தன், இஷா கோபிகர் நடிக்க ‘சூர்ய வம்சா’ என்ற பெயரிலும், இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

- Advertisement -

25 ஆண்டுகளை கடந்த படம் :

தமிழை போலவே மற்ற மொழிகளிக்கும் இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. 25 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் இன்றும் இந்த படத்தை டிவியில் போட்டால் பார்க்கும் 90ஸ் ரசிகர்கள் ஏராளம். அதே போல தமிழ் சினிமாவின் கடந்த 25 ஆண்டுகளில் அதிகம் திரையரங்கில் பார்க்கப்பட்ட படம் இது தான். இன்று வரை இந்த சாதனையை ரஜினி, கமலால் கூட முறியடிக்க முடியவில்லை.

10 ஆண்டுகள் கழித்து எடுத்த விக்ரமன் :

இந்த படத்தை 1988 ஆம் ஆண்டே விக்ரமன் எடுக்க திட்டமிட்டு இருந்தார். அதில் சரத்குமார் மற்றும் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அது முடியாமல் போக 10 ஆண்டுகள் கழித்து சரத்குமாரை இரட்டை வேடத்தில் வைத்து இந்த படத்தை எடுத்தார் விக்ரமன். விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படம் மாபெரும் வெற்றியடைய அந்த படத்தை தயாரித்த ஆர் பி சௌத்ரி விக்ரமனுக்கு கொடுத்த வாய்ப்பு தான் வானத்தை போல படம்.

-விளம்பரம்-

படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் :

அந்த படம் வெளியான சில காலத்தில் சூர்ய வம்சம் படத்தின் கதையை எழுதி முடித்த விக்ரமன் ஆர் பி சௌத்ரியின் தயாரிப்பில் இந்த படத்தை எடுத்தார். இந்த படத்தின் பல காட்சிகள் மீம் டெம்ப்லேட்டாக இன்றும் பிரபலம் தான். அதில் குறிப்பாக ‘பாயசம் சாப்பிடுங்க பிரெண்ட்’ என்ற வசனம் படு பேமஸ். அந்த வசனத்தை இந்த படத்தில் மகன் சரத்குமாரின் மகன் தான் சொல்லி இருப்பார். இது நாள் வரை அந்த குழந்தை கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த ஹேமா என்று தான் பலர் நினைத்து இருப்பார்கள்.

குட்டி சக்திவேலாக நடித்த நிவாஷினி :

ஆனால், உண்மையில் அந்த குழந்தையாக நடித்தது சீரியல் நடிகை நிவாஷினி திவ்யா தான். இவர் நீதானே எந்தன் பொன்வசந்தம், யாழினி, மரகத வீணை போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும், இவர் குழந்தை நட்சத்திரமாக மட்டும் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும், இடையில் பிரேக் எடுத்துக்கொண்ட இவர் சீரியல்களை தயாரிக்க செய்தார் சமீபத்தில் ஜீ தமிழில் துவங்கப்பட்ட புது புது அர்த்தங்கள் தொடரை தயாரித்தது இவரே.

Advertisement