ஒரு வருஷம் ஓடி இருக்கனும் ஆனா, 270 நாள்ல நிறுத்திட்டாங்க, அதுக்கு காரணம் – 26 ஆண்டுகள் நிறைவு செய்த பூவே உனக்காக குறித்து விக்ரமன்.

0
656
poove
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் விக்ரமன். இவர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதற்கு பிறகு தான் புது வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் விக்ரமனின் சினிமா பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் பூவே உனக்காக. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்தில் விஜய், சங்கீதா நடித்திருந்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் முரளி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த படம் வெளியாகி 26 வருடங்கள் முடிவடைந்ததை ஒட்டி இந்த படம் குறித்து இயக்குனர் விக்ரமன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்று பூவே உனக்காக. இந்த படத்திற்கு பிறகு தான் அவருடைய திரைப்பயணம் மாறியது. இந்த படம் 270 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ஆனால், இந்த படம் ஒரு வருஷம் ஓடி இருக்கணும். படம் பிப்ரவரியில் வெளியானது. தொடர்ந்து அவர் ஃபுல்லாக ஓடிட்டிருந்தது. இடையே தீபாவளி வந்ததால் வேற படங்கள் ரிலீஸ் பண்ண வேண்டிய சூழலில் தான் படத்தை மாற்றினார்கள்.

- Advertisement -

இயக்குனர் விக்ரமன் அளித்த பேட்டி:

மேலும், படம் 270 நாட்கள் ஓடி விழா, பார்ட்டி , அமர்க்களம் என்று பயங்கரமாக இருந்தது. இந்த படத்திற்கு கதை எழுதும் போது விஜய், நம்பியார், நாகேஷ், மலேசியா வாசுதேவன் என்று பலரையும் மனதில் வைத்து தான் எழுதினேன். என்னுடைய முந்தைய படங்கள் சரியாக ஓடவில்லை. அதனால் எனக்காக ஆர்பி சவுத்ரி சார் இந்த படத்தை தயாரித்தார். அவரிடம் விஜய் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னதும் உடனே நீங்கள் எஸ்.ஏ சந்திரசேகர் சாரிடம் கதையை சொல்லுவீங்களா? என்று கேட்டார். நான் யார்கிட்ட வேண்டுமானாலும் சொல்லுவேன், எனக்கு தயக்கம் இல்லைன்னு சொன்னேன்.

பூவே உனக்காக படம் உருவான விதம்:

பின் நான் எஸ்.ஏ சந்திரசேகர் சார் கிட்ட கதை சொல்லும்போது விஜய்யும் கூப்பிட்டு உட்கார வைத்து கதையை சொன்னேன். இரண்டு பேருக்கும் கதை பிடித்து விட்டது. ஆனால், விஜய் கால்ஷீட் உடனடியாக கிடைக்கவில்லை. இதனால் மூன்று மாதம் சூட்டிங் தள்ளிப்போனது. இந்த படத்துக்கு இப்ப நீங்க பார்க்கிற கிளைமாக்ஸ் தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை. ஏன்னா, படம் முழுவதும் ஹாப்பியா போயிட்டு முடியும் நேரத்தில் சந்தோசமாக இல்லாமல் இருந்தது அவருக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், காதலை சுமந்து இருக்கிறதே சுகமானது என்பது தான் கிளைமாக்ஸில் நான் சொல்லியிருப்பேன். அது தான் கதைக்கு வலு கொடுக்கும் என்று நம்பினேன்.

-விளம்பரம்-

விக்ரமனுக்காக முரளி செய்த செயல்:

மேலும், படம் வெளியிடுவதற்கு முன்னாடி இந்த படத்தை பார்த்த என்னுடைய நண்பர்கள், மீடியேட்டர்கள், விநியோகஸ்தர்கள் எல்லோருமே கிளைமாக்ஸ்ஸை ரொம்ப விரும்பி ரசித்தார்கள். அப்போது எனக்கு நம்பிக்கை வந்தது. அதேபோல் இந்த படத்தில் நம்பியார், நாகேஷ், மலேசியா வாசுதேவன் எல்லோரையும் நடிக்க வைத்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது. இதுக்கு முன்னாடி ஆனந்த் பாபு வைத்து ரெண்டு படங்கள் இயக்கி இருந்தேன். அதனால், நாகேஸ் அறிமுகம் கிடைத்தது. முரளி என்னோட குடும்ப நண்பர் மாதிரி. அவர்கிட்ட மச்சினிச்சி வந்த நேரம் பாடலுக்கு ஆட கேட்டேன்.

எம்ஜிஆர்-சிவாஜி வைத்து இயக்க நினைத்தது:

உடனே அவர் எந்த தயக்கம் இல்லாமல் ஆடி கொடுத்தார். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அதோடு எனக்காக சம்பளமும் அவர் வாங்கவில்லை. இதில் மிகப் பெரிய பெரிய ஜாம்பவான்கள் இயக்கியது போல சிவாஜி சாரை வைத்து படம் இயக்க விரும்பினேன். ஆனால், அந்த ஆசை நிறைவேறவில்லை. எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அதோட விழாவில் சிவாஜி சாருக்கு எம்ஜிஆர் கையால் விருது கொடுக்க விரும்பினேன். ஆனால், என் கனவு நனவாகவில்லை. அது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்று கூறி இருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement