தென்னிந்திய சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். பொதுவாகவே 2கே கிட்ஸ் நடிகைகளின் பங்களிப்பு மலையாள சினிமாவில் அதிகமாகவே இருந்து வருகிறது. அப்படி இளம் வயதிலேயே நட்சத்திரமாக பிரபலமாகி பின்னர் தற்போது முன்னனி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
எஸ்தர் அணில் :
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் “பாபநாசம்” ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதில் வரும் இளைய மகளாக மீனு என்னும் கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியின் நடிப்பு அனைவரையும் மிரள வைத்தது. மலையாள குழந்தை நட்சத்திரமான அந்த சிறுமி மலையாளத்தில் வெளியான திரிஷம் படத்திலும் மோகம் லாலுக்கு மகளாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் அர்புதமாக நடித்ததால் தமிழிலும் ஆவர் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். பாபநாசத்தில் நடித்த மீனு குட்டியை பார்த்தால் நீங்கள் அவரை குட்டி என்று அழைக்க மாடீர்கள்.
அதற்கு காரணம் தற்போது அவர் வளர்ந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் எஸ்தர், அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட்களில் இருந்து சில புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இந்த வயதில் இப்படியா ஆடை அணிவது என்று அட்வைஸ் செய்து வருகின்றனர். தற்போது எஸ்தர் அணிலுக்கு 21 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா வாரியார் :
மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி காட்டி செய்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை தான் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் படத்தில் இவர் காட்டிய முக பாவனைகள் சடசடவென உலகம் முழுவதும் பரவி வரை இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்தது. சமூக வளைதளத்தில் மட்டும் இவரை 70 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் ஒரு அடார் லவ் திரைப்படம் எதிர்பாத்த அளவிற்கு வெற்றியடையவில்லை, அதற்கு காரணம் இவர் தான் என்று அந்த பாத்தின் இயக்குனர் இவரின் மீது குற்றம் சாட்டினார். சிறிது காலம் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். கடந்த 1999ஆம் ஆண்டு பிறந்த இவர் தொடர்ந்து போட்டோ ஷாட்களை நடத்தி தன்னுடைய ஷோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.
அனிகா சுகேந்திரன் :
குழந்தை நட்சத்திரமாக கடந்த 2007ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “சோட்டா மும்பை” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார். பின்னர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தற்போது கதாநாயகியாக உருமாறியுள்ளார். மேலும் இவர் சில குறும்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு நடிப்புக்காக கேரளா அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது அனிகா சுஜகேந்திரன் ஒ மை டார்லிங், PT சார், வசுவின் வாசுவின் கர்ப்பிணிகள் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
2004ஆம் ஆண்டு பிறந்த அனிகா சுகேந்திரனுக்கு தற்போது 19 வயதாகும் நிலையில் கர்ப்பிணியாக வாசுவின் கர்ப்பிணி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. மேலும் இப்படத்தில் நீயா நானா கோபிநாத், சீதா, வனிதா விஜய குமார் என பலரும் நடித்திருக்கின்றனர்.
அனஸ்வரா ராஜன் :
அனஸ்வரா ராஜன் டிக் டாக் மற்றும் குறும்படங்கள் மூலம் சினிமாவிற்கு நுழைந்த இவர் உடஹாரணம் சுஜாதா என்ற படத்தில் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகினார். பின்னர் இவர் நடடித்த தண்ணீர் மத்தான் தினங்கள் என்ற படம் நல்ல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவரை மக்கள் மத்தியில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது. பின்னர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் சுஜாதா. இவர் தற்போது யாரியன் 2 மற்றும் ப்ரணயவிலாசம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.