என் தனித்தன்மை புடித்திருந்தால் லைக் பண்ணுங்க – சரணடைந்த குட்டி வடிவேலு.

0
69728
kutty
- Advertisement -

சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விடீயோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு. இந்த அற்ப லைக்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வந்தனர்.

-விளம்பரம்-

டிக் டாக் மூலம் பல 2k கிட்ஸ் பசங்க கூட பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் பள்ளிக்கு செல்லும் வயதில் வயதுக்கு மீறி வீடியோ போட்டு பிரபலமானவர் குட்டி வடிவேலு.பல 90ஸ் கிட்ஸ்கள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கையில் இன்னும் வயசுக்கு கூட வராத இவர்கள் இருவரும் பொழிந்த காதலை பார்த்து பலரும் கடுப்பாகினர். இவர்களின் இந்த வீடியோவை பலரும் ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோவில் பேசிய குட்டி வடிவேலுவை விட அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது அவருக்கு ஆறுதல் சொன்ன சோபி தான்.

இதையும் பாருங்க : மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்மபிரியா விலகல் -காரணம் இது தானாம். (அவங்க வாங்கிய ஓட்டு எவ்ளோ தெரியுமா, எல்லாம் போச்சே)

- Advertisement -

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் தரப்பில், கடலுார் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். பின் சிறுமியை மீட்டு, கடலுார் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த பெண்ணிடம் நடந்த விசாரணையில் குட்டி வடிவேலு தான் இதுபோல வீடியோ போட சொன்னார் என்றும் ட்ரெண்டிங்கிற்காக இப்படி செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் இதுபோன்று இனி செய்யக்கூடாது என்று அந்த சிறுமிக்கு அறிவுரை கூறி உள்ளனர். இப்படி ஒரு நிலையில் அந்த சிறுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் பேசியது தவறு தான் இனிமேல் நான் எந்த வீடியோவையும் பண்ண மாட்டேன் என்று கூறியுள்ளார். ட்ரெண்டிங்கிற்கு ஆசைபட்டு இனமே என் வயது பெண்கள் இதுபோல செய்ய வேண்டாம் என்றும் அந்த சிறுமி கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் குட்டி வடிவேலுவும் தன் பங்கிற்கு மன்னிப்பு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த சில நாட்களாக எங்களுடைய ட்ரோல் வீடியோக்கள் தான் ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கிறது. முதலில் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் நான் எந்த ஒரு காதல் சம்பந்தப்பட்ட வீடியோவும் போட மாட்டேன். இனிமேல் என்னுடைய தனித்தன்மையை மட்டும்தான் காட்டுவேன். அதே பார்த்து உங்களுக்கு பிடித்திருந்தால் என்னை ஆதரியுங்கள். நான் பதிவு செய்த அந்த வீடியோவால் எனக்கும் பிரச்சனை வந்து விட்டது அந்த பெண்ணிற்கும் பிரச்சனை வந்து விட்டது. அதனால் என் வயதில் இருக்கும் பசங்க யாரும் இதுபோன்ற வீடியோக்களை செய்ய வேண்டாம் எங்களோடு இந்த விஷயம் முடியட்டும்.

Advertisement