ராமர் கோயில் திறப்பு விழா குறித்து 30 வருடங்களுக்கு முன் கமலஹாசன் கூறி இருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாப்பிக்கே அயோத்தி ராமர் கோயில் குறித்த செய்தி தான். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் அனைவரும் அறிந்ததே. இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது.

ஸ்ரீராம் உள்நாட்டு தீர்த்தத்தின்படி இராமர் கோயில் மூன்று அடுக்குகளை கொண்ட தளம். ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 392 தூண்களையும், 44 கதவுகளையும் கோயில் கொண்டுள்ளது. 1800 கோடி செலவில் நான்காண்டுகளாக இந்த கோவில் கட்டப்பட்டது. இப்படி புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாகி இருக்கிறது. இந்தியா நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு முழுவதும் காண வருகை தந்துள்ளனர்.

Advertisement

அயோத்தி ராமர் கோவில்:

மேலும், இந்த நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், இந்திய சினிமாவின் பிரபல பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்தியா முழுவதும் இந்த நாளை அனைவருமே சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். கும்பாபிஷேகம் முடிந்தாலுமே பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கவில்லை. இன்று பொதுமக்களின் தரிசனத்திற்காக அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் பேட்டி:

இந்த நிலையில் ராமர் கோயில் திறப்பு விழா குறித்து நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் அவர், நான் 30 ஆண்டுகளுக்கு முன்பே இதைப் பற்றி பேசிவிட்டேன். அதே கருத்து தான் இப்போதும். அதில் மாற்றமில்லை என்று கூறி இருக்கிறார். உடனே சோசியல் மீடியா முழுவதும் 30 ஆண்டுகளுக்கு முன் கமல் சொன்ன விஷயத்தை பலரும் தேட ஆரம்பித்து விட்டார்கள்.

Advertisement

30 வருடங்களுக்கு முன்பு நடந்தது:

அதாவது 30 வருடங்களுக்கு முன்பு பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ். பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு கண்டனம் தெரிவித்து பிரதமரை சந்தித்து கமலஹாசன் பேசியிருந்தார். அதுமட்டுமில்லாமல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து கலவரங்கள் வெடித்தது. கலவரங்களை கண்டித்து நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஏந்தி கமலஹாசன் போராட்டம் நடத்தி இருந்தார். இந்த சம்பவம் அப்போது பத்திரிகைகளில் மிகப் பரவலாக பேசப்பட்டிருந்தது.

Advertisement

கமல்கொடுத்த பதில்:

அதன் பின் ஜெயப்பிரதா நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமலஹாசன், ஒரு அரசியல்வாதி என்பவர் மதங்களுக்கு அப்பால் பட்டவராக இருக்க வேண்டும். மதக் கலவரங்களை ஏற்படுத்தக் கூடாது. கடவுள் என்பது பொதுவானவர் என்றெல்லாம் பேசி இருந்தார். தற்போது 30 வருடங்களுக்கு முன்பு கமலஹாசன் அளித்திருந்த பேட்டி வீடியோ தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement