விஜய் வைத்து படம் எடுக்காமல் போனதற்கு காரணம் இதுதான் என்று சுந்தர் சி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் சுந்தர்.சி. கடந்த 1995-ஆம் ஆண்டு வெளி வந்த ‘முறை மாமன்’ படத்தினை சுந்தர்.சி இயக்கியிருந்தார். இது தான் இவர் இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பல தமிழ் படங்களை இயக்கினார். மேலும், தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநர் என்பதுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் தனது என்று நினைத்த சுந்தர்.சி அடுத்ததாக ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். இவர் ‘தலைநகரம், வீராப்பு, படத்தின் ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, இருட்டு போன்ற பல படங்களில் நடித்தார். அதன் பிறகு அவரே இயக்கி நடித்த ‘நகரம் மறுபக்கம், கலகலப்பு 1&2, அரண்மனை 1 & 2, 3’ போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

Advertisement

சுந்தர் சி திரைப்பயணம்:

அந்த வகையில் தற்போது சுந்தர் சி அவர்கள் அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கியிருக்கிறார். இதில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, விடிவி கணேஷ், ஜே பி விச்சு, விடிவி ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை Avni Cinemax சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT சுந்தர் சார்பில் Benz அருண்குமார் தயாரித்து இருக்கிறார்கள். மேலும், இதுவரை வந்த மூன்று பாகங்களை விட இந்த படத்தை கொஞ்சம் வித்தியாசமாக இயக்குனர் எடுத்திருக்கிறார்.

சுந்தர் சி பேட்டி:

சில தினங்களுக்கு முன்பு தான் அரண்மனை 4 படம் வெளியாகியிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சுந்தர் சி அவர்கள் விஜய் குறித்து சொன்னது, விஜய் சாருக்கு நான் நிறைய கதை சொல்லி இருக்கிறேன். உன்னை தேடி படத்தோட கதையை முதலில் நான் விஜய் சாரிடம் தான் சொன்னேன். அவர் எப்போதுமே கதையை முழுவதுமாக கேட்பார். 4 மணி நேரம் கூட உட்கார்ந்து கதை கேட்பார்.

Advertisement

விஜய் குறித்து சொன்னது:

தமிழ் சினிமாவில் முழுதாக கதை கேட்டு படம் பண்றவர்களில் அப்போது விஜயகாந்த் சார், இப்போது விஜய் சார். ஆனால், எனக்கு கதை சொல்ல வராது. கதையோட ஐடியா மட்டும் தான் சொல்லுவேன். அதனால் உன்னை தேடி படத்தோட ஐடியாவை மட்டும் விஜய் சாரிடம் சொன்னேன். அவருக்கு புரியவில்லை. மேலும், ஐடியா நல்லா இருக்கு அப்பாவிடம் கேட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார். எஸ் ஏ சி சார் முழுவதுமாக கதையை கேட்டு தான் நடிக்கணும் என்று சொல்லிக் கொடுத்து பழகி இருக்கிறார். அதற்குப் பிறகு நீங்கள் சொன்ன ஐடியா அவருக்கு புரியவில்லை, ஆனால், உங்களுடன் விஜய்க்கு படம் பண்ண ஆசை என்று சொன்னார்.

Advertisement

விஜய் உடன் படம் பண்ணாத காரணம்:

அதற்குப் பிறகு பத்து சில நாட்களில் அஜித், என்னை தேடி வந்து உங்களுடன் படம் பண்ணனும் என்று நினைக்கிறேன். பண்ணலாமா என்று கேட்டார். நானும் விஜய்க்கு சொன்ன உன்னை தேடி கதையை அஜித்தை வைத்து பண்ணி விட்டேன். விஜய் கூட வேற படலம் பண்ணலாம் என்று பிளான் பண்ணி இருந்தேன். ஆனால், அது தள்ளிக்கொண்டே போனது. அதற்கு பிறகு விஜய் பிஸியாகிவிட்டார். பின் சில ஆண்டுகளுக்கு பிறகு விஜய்க்கு ஒரு கதை சொன்னேன். அவர், முதல் பாதி கேட்டுவிட்டு பாராட்டினார்.

விஜய் அரசியல் குறித்து சொன்னது:

பின் இரண்டாம் பாதி கொஞ்சம் சரியில்லை மாற்றுங்கள் என்று சொன்னார். ஆனால், அவர் சொன்ன மாதிரி இரண்டாம் பாதி சரி இல்லை. அதனால் படமும் தோல்வி அடைந்தது. இப்படி விஜய்க்கு நான் நிறைய கதையை சொல்லி இருக்கிறேன். ஆனால், பல காரணங்களால் நாங்கள் படம் பண்ணாமலேயே தள்ளிப்போனது. இப்போது அவர் 2026 இல் தேர்தலில் களமிறங்க இருப்பதால் கடைசியாக ஒரே ஒரு படம் பண்ணப் போகிறார் என்று கேள்விப்பட்டேன். கண்டிப்பாக அந்தப் படத்தோட இயக்குனர் நான் இல்லை. இதனால் இனி அவருடன் படம் பண்ணுவது கஷ்டம். விஜய் சார் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் மக்களுக்காக களம் இறங்குவது பாராட்டுக்குரிய ஒன்று. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement