ஐஸ்வர்யா ராய் என்னை பெற்றெடுக்கும் போது அவருக்கு 15 வயது தான் – சர்ச்சையை கிளப்பிய இளைஞர்.

0
113032
ayswarya-rai
- Advertisement -

இந்தியாவின் உலக அழகி என்ற பட்டம் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மணிரத்தினம் இயக்கிய “இருவர்” என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் மற்றும் தாயார் பிருந்தா ஆகும். நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

இந்நிலையில் மங்கல் ஊரை சேர்ந்தவர் சங்கீத்ராய் குமார். இவருக்கு 31 வயது ஆகிறது. இந்த சங்கீத்ராய் குமார் கடந்த ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராய் தான் தன்னை பெற்றெடுத்த தாய் என்று சோசியல் மீடியாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்ததே. அவர் அந்த வீடியோவில் கூறியிருந்தது, ஐஸ்வர்யா ராய் அவர்கள் செயற்கை கருத்தரித்தல் மூலம் லண்டனில் 1988 ஆம் ஆண்டு என்னை பெற்றெடுத்தார். ஐஸ்வர்யா ராய் என்னை பெற்றெடுக்கும் போது அவருக்கு 15 வயது தான் ஆனது.

இதையும் பாருங்க : மாமனாரின் அந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசை. பேட்டியில் ஓப்பனாக சொன்ன மருமகன்..

பின்னர் எனது அம்மா ஐஸ்வர்யா ராய்க்கு 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனுடன் திருமணம் ஆனது. ஆனாலும், அவர் தற்போது தனியாக தான் வசித்து வருகிறார். அவர் என்னுடன் வசிக்க வேண்டும். என் அம்மாவை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன். என் அம்மாவின் செல்போன் நம்பரையாவது எனக்கு தாருங்கள். எனக்கு என் அம்மா வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த வாலிபர் சங்கீத்ராய் குமாருக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் தான் அவரது அம்மா என்று நிரூபிக்க எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை. இந்த நிலையில் அந்த வாலிபர் தற்போது மீண்டும் ஒரு புயலை கிளப்பி உள்ளார். இது குறித்து அந்த வாலிபர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Related image

அதில் அவர் கூறியது, இரண்டு வயது வரை என்னை என் பாட்டி பிருந்தா மற்றும் தாத்தா கிருஷ்ணராஜ் தான் பார்த்துக் கொண்டார். பின்னர் என் தந்தை வடிவேலு ரெட்டி விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்று விட்டார். நான் அங்கு தான் வளர்ந்தேன். பின் எனது உறவினர்கள் என்னுடைய பிறப்பு சான்றிதழ்களை எல்லாமே அழித்து விட்டார்கள். தற்போது நான் மும்பையில் என் அம்மா ஐஸ்வர்யாராயுடன் வசிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

அந்த பேட்டியில் சங்கீத்ராய் குமார் அவர்கள் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் என்னுடைய அம்மா என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து ஐஸ்வர்யாராயும், அபிஷேக் பச்சனும் ஏன் இன்னும் எந்த தகவலையும் கூற வில்லை என்று பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். ஒரு வருட காலமாக இந்த பிரச்சனை சோசியல் மீடியாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்துகிறது.

Advertisement