மாமனாரின் அந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசை. பேட்டியில் ஓப்பனாக சொன்ன மருமகன்..

0
5406
Dhanush-Rajini

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் நடிகர் தனுஷ். இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன், ஆடுகளம், மாரி, வேலையில்லா பட்டதாரி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். தனுஷ் அவர்கள் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பன்முகங்களை கொண்டவர். அதோடு “ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடல் மூலம் இந்த உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தவர் நடிகர் தனுஷ்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை ஆடியது. இதனைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “என்னை கௌதம் பாயும் தோட்டா” படம் நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு சமீபத்தில் தான் வெளி வந்தது. இந்த படமும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது நடிகர் தனுஷ்அவர்கள் செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள “பட்டாஸ் படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் நடிகர் தனுஷ் அவர்கள் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : ஏழையாகவும், பெண்ணாகவும் பிறந்தது தவறா ? விஷம் அருந்திய பிக் பாஸ் நடிகை.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் தனுஷ் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசையாக உள்ளது என்று சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். 30 வருடங்களுக்கு முன்பு ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தை தான் ரீமேக் செய்து நடிக்க ஆசை என்று தனுஷ் கூறி உள்ளார். 1981 ஆம் ஆண்டு வெளி வந்த படம் தான் நெற்றிக்கண். இந்த படத்தை எஸ்பி முத்துராமன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த், சரிதா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். பேட்டியில் நடிகர் தனுஷ் கூறியது, இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Image result for rajini netrikan movie

-விளம்பரம்-

நெகட்டிவ் வேடத்தில் நடித்தால் மக்கள் வெறுப்பார்கள், ஆனால், நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் பிளே பாய் கதாபாத்திரத்தில் நடித்தும் அனைவரையும் ரசிக்க வைத்தது எனக் கூறி உள்ளார். மேலும், தனுஷ் அவர்கள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இது தனுஷின் 40வது படம் ஆகும். இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். அதோடு இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவுற்ற நிலையில் உள்ளது என்று கூறுகிறார்கள்.

Advertisement