பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட டிமாண்ட் ஏற்பட்டு பின்னர் தொலைக்காட்சி விளம்பரங்கள்,டிவி ஷோக்கள் என்று பல வைப்புகள் வந்துகொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஓடி விளையாடு பாப்பா என்ற குழந்தைகள் நடன நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.
இவர் ஏற்கனவே சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான மன்னர் வகைரா என்ற படத்தின் மூலம் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தற்போது உத்தமி என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இதை விட கொடுமையான விஷயமாக சமீபத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் கதாபாத்திரத்தில் ஜூலி நடிக்க போகிறார் என்று ஒரு சில போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களை வெறுப்பேற்றியது.
தற்போது உத்தமி படத்தை K7 ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது . மேலும் இந்த படத்தில் யாரை கதாநாயகனாக போடுவது என்று பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். அதன்படி பிரபல தொகுப்பாளர் ஒருவருரிடமும் , உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் ,முன்னணி நடிகர் ,வெள்ளித்திரை நடிகர் என்ற 4 பேரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்




