47 வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி – பதக்கங்களை குவித்த அஜித். அடேங்கப்பா, எத்தனை தெரியுமா ?

0
571
ajith
- Advertisement -

துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் தங்கம் வென்று உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ஏப்ரலில் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க ; 4 மாதத்தில் இறந்த மகள், தவறான ஊசியால் இறந்த கணவர் – கல்லறையில் கலங்கி நின்ற டிஸ்கோ சாந்தி. வீடியோ இதோ.

அஜித் நடிக்கும் படங்கள்:

இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். இதனை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக உள்ள தகவல் சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நடிகர் அஜித் அவர்கள் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அஜித் அவர்கள் இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். அது மட்டும் இல்லாமல் இவர் துப்பாக்கி சுடுதல் துறையில் பயிற்சிகளை செய்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் கலந்து கொண்டு இருந்தார். தற்போது இவர் திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு இருந்தார். இங்கு 47 வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று இருந்தது.

துப்பாக்கி சுடும் போட்டி குறித்த தகவல்:

கடந்த 24-ந் தேதி தொடங்கி இந்த போட்டிகள் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 1,300 போட்டியாளர்கள் பங்கு பெறுகின்றனர். இதில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் அளவில் போட்டிகள் நடைபெறுகின்றன. மேலும், 16 வயது சப்-யூத், 19 வயதினருக்கான யூத், 21 வயதினருக்கு ஜூனியர், 21ல் இருந்து 45 வயதினருக்கான சீனியர், 45 வயதில் இருந்து 60 வயதிற்கான சீனியர் மாஸ்டர் ஆகிய பிரிவின் கீழ் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் வென்ற நபர்கள்:

இந்த போட்டியில் நடிகர் அஜித் கலந்து கொண்டு இருந்தார். இதனைதொடர்ந்து 3 சுடுதளத்திலும் பிஸ்டல் பிரிவு போட்டிகளில் கலந்துகொண்ட அஜித் இலக்கை நோக்கி சுட்டார். பின் போட்டிகள் முடிந்து அன்றிரவே சென்னை புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பிஸ்டல் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு விழா சில தினங்களுக்கு முன்பு நடந்தது. அதில் ஓய்வு பெற்ற டிஜிபி தேவாரம் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். இதில் மொத்தம் 162 பேர் பதக்கங்களை வென்றனர்.

தங்கம் வென்ற அஜித்:

இதில் நடிகர் அஜித்குமார் அவர்கள் சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும் ,50மீ பிரீ பிஸ்டல் ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கம் என நான்கு தங்கம், இரண்டு வெண்கலப் பதக்கம் மொத்தம் ஆறு பதக்கங்களை வென்றிருக்கிறார். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் அஜித்குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement