மெர்சல்’ல இந்த 5 லாஜிக் மிஸ்டேக்குளை மறந்துட்டீங்களே அட்லி!

0
17936
mersal

1.முதலில் டாக்டர் மாறன் உலக அளவில் புகழ்பெற்ற சர்ஜன் என காட்டுகிறார் அட்லீ. ஆனால், படித்திருப்பதோ எம்.டி உண்மையில் எம்.எஸ் படித்தவே தானே சர்ஜரி செய்ய முடியும், என்னங்க அட்லீ கோட்டை விட்டுட்டீங்களே இதுல!!
mersal2. இரண்டாவது ஃப்ளாஷ்பேக்கில், மெயின் வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவுக்குப் பக்கபலமாக துணை நிற்பவராக வருகிறார் ‘விக்ரம் வேதா’ புகழ் சேட்டா. எஸ்.ஜே.சூர்யா டி.வியில் விஜய்யை அடையாளம் கண்டுகொள்ளும்போது, படம் ஆரம்பித்த உடனே சர்வதேச மருத்துவர்கள் விருது விழாவில் விஜயை நேரில் பார்த்த சேட்டாவுக்கு மட்டும் அடையாளம் தெரியாமல் போவதெப்படி? மாறனைப் பார்த்து சிறு சந்தேகமாவது எழ வேண்டும். ஆனால், எந்தவொரு சந்தேகமும், இன்றி இயல்பாக அவருடன் உரையாடுவது பெரிய லாஜிக் எதார்த்த ஓட்டையை போடுகிறது அந்த இடம் .

3.மூன்றாவது ஃப்ளாஷ்பேக்கில் எஸ்.ஜே.சூர்யா – விஜய் இருவரின் கடைசி நேர உரையாடலைக் கேட்கும் ஓரே ஆள் வடிவேலு. அவரை மையமாக வைத்துதான் ஒட்டுமொத்த `மெர்சல்’ படத்தின் கதையும் நகரும். குப்பையில் இருக்கும் இரண்டாவது விஜய்யுடன் இவர் எப்படிக் கூட்டு சேர்ந்தார் என்பதும் கேள்விக்குறியை எழுப்புகிறது. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு பதில் வடிவேலுவுக்கே தெரியாது. அப்படி இருக்கையில், வடிவேலுவுக்கு எப்படி அந்த விஜயைத் தெரிந்தது என்ற சந்தேகம், இதில் இவருடன் ஒரே நேரத்தில் வேலையும் பார்க்கிறார் வடிவேலு. இந்த இடம் படம் முடிந்ததும் அனைவர் மனதிலும் எழும் ஒரு சந்தேகத்திற்குரிய இடம்.

4.மருத்துவராக வரும் விஜய் சாதுவா இல்லை சண்டை போடும் மெர்சலான ஆட்டக்காரரா என்ற குழப்பம் கதை முழுக்க பயணிக்கிறது. விமான நிலையத்தில் எகிறிக்குதித்து சண்டை எல்லாம் போட்டு சாகசம் செய்யும் மாறன் இடைவேளைக்கு முந்தைய காட்சியில் வில்லன் ஆட்களிடம் தாறுமாறாக அடி வாங்குவார். அதன்பின் க்ளைமேக்ஸில் திரும்ப பொளந்துகட்டுவார். அவரின் குணாதீஸ்யத்தை சரியாக காட்டாமல் நெருடலை ஏற்படுத்துகிறார் அட்லீ.

5.மேஜிக் காட்சி வரை முறைகளை மீறி ஹேண்ட் பேக்கில் இருந்து எடுக்கும் சூலாயுதம் எல்லாம், குருவி விஜயை கொண்டு வருகிறது. ஆனால், எப்படியோ ரஹ்மானின் பேக்ரௌண்ட் மியூசிக் அந்த இடத்த சந்தேகம் இல்லாமல் நகர்த்துகிறது. மேஜிக் காட்சிகள் சற்று ஓவர் லாஜிக் தான்