மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் 5 பேர் பரிதாப பலி – அதிர்ச்சியளிக்கும் தகவல்

0
372
- Advertisement -

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் குடும்பத்தில் தொடரும் சோகம். கார் விபத்தில் சுஷாந்த் சிங் உறவினர்கள் 5 பேர் பலியாகிய அதிர்ச்சி தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. நடிகர் சுஷாந்த் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். பின்னர் தொலைக்காட்சி டான்சராகவும், சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார். எம்.எஸ் தோனியின் வாழ்கை வரலாற்று படத்தில் ரீல் தோனியாகவே மக்கள் மனதில் இடம் பிடித்தார் சுஷாந்த். பிறகு பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தார்.

-விளம்பரம்-

மேலும், தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், மருத்துவ ஆலோசனைகளை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் சுஷாந்த் தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை குறித்து சோசியல் மீடியாவில் பல விதமான சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் சுஷாந்த் குடும்பத்தை சேர்ந்தவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஹரியானாவில் இருந்த சுஷாந்த் மைத்துனர் ஒருவரின் இறுதிசடங்கிற்கு சுஷாந்த்தின் உறவினர்கள் சென்று இருந்தார்கள். பின் அவர்களின் சொந்த ஊரான பாட்னாவுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது பீகார் லக்கி சராய் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் சுமோ, லாரி எதிர் எதிர் மோதி மிக பெரிய விபத்து ஏற்பட்டு இருந்தது. இதில் 6 பேர் மரணம் அடைந்து உள்ளார்கள். அதில் ஐந்து பேர் சுஷாந்த் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து பலரும் பலவிதமாக கருத்துகளை பதிவிட்டு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீஸ் கூறியது, டாடா சுமோ காரில் டிரைவர் உட்பட மொத்தம் 10 பேர் பயணம் செய்து இருக்கின்றார்கள். அந்த கார் கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேற்கொண்டு நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement