இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் ஆட்டத்தில் 7 வயதே ஆன சிறுவன் தேர்வு..!

0
974
Archie-Schiller
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வரும் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 7 வயதான ஆர்ச்சி ஸ்கில்லர் என்ற சிறுவன் 15-வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

அரிதான இதையா நோயால் பாதிக்கப்பட்டுள்ள அந்த சிறுவனுக்கு இதுவரை 13 முறை அறுவை சிகிச்சை நடைப்பெற்றுள்ளது. அந்த சிறுவனுக்கு ஆஸ்திரேலிய அணியில் விளையாடவது தன கனவு என்று அறிந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அந்த சிறுவனின் ஆசையை பூர்த்தி செய்துள்ளது.

சிறுவனது ஆசையை நிறைவேற்றியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு பல்வேறு பாராட்டுக்கள் குவித்து வருகிறது. மேலும், அந்த அணியில் சேர்ந்து நீ என்ன செய்ய போகிறாய் என சிறுவனிடம் கேட்ட போது, `இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை அவுட்டாக்கி விக்கெட் எடுப்பேன்’ என்று தெரிவித்துள்ளான்.

-விளம்பரம்-
Advertisement