தமிழில் ஜீவா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ‘டிஷ்யூம்’ திரைப்படத்தில் அமிதாப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் மலையாள நடிகர் பக்ரு. குள்ள நடிகர்களை தமிழ் சினிமா கொஞ்சம் மறந்திருந்த நிலையில் அவர்களை மீண்டும் நினைவுபடுத்தியவர் நடிகர் பக்ரு தான். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் மிமிக்ரி கலைஞ்சராக அறிமுகமானார்.
அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் டிஷ்யூம், அற்புத தீவு, காவலன், 7 ஆம் அறிவு போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனரகாவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் பக்ரு. இவரது உண்மையான பெயர் அஜய் குமார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
2 வாரத்தில் இறந்த முதல் குழந்தை :
திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்து 2 வாரத்திலேயே இறந்துவிட்டது. அதன் பின்னர் இவருக்கு 2009 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அவரது பெயர் தீப்தா கீர்த்தி.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் பக்ரு தனது மகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். சினிமால என்னால சிறப்பா வரமுடியும்கிற நம்பிக்கையைப் பெற்றோருக்குக் கொடுக்கும்விதமா எனக்கு சில வாய்ப்புகள் அமைஞ்சது.
அண்ணன் என்று நினைத்த மகள் :
அந்த சூழல்ல காயத்ரி என் வாழ்க்கைத் துணையாக வந்தது, என் வாழ்வின் அழகான அத்தியாயம்.எனக்கு நம்பிக்கை கொடுத்தது என் மனைவி தான் . பின்னர் 2009-ல் எங்க பொண்ணு தீப்த கீர்த்தி பிறந்தா. ஏழு வயசு வரை என்னை அண்ணன்னுதான் நினைச்சுகிட்டிருந்தா!’’ எனும்போது, பக்ரூ கண்களில் சிறிய புன்னகை. “என் பொண்ணுதான் என் உலகம்.
துணையாக இருக்கும் மகள் :
பாடம் சொல்லிக்கொடுக்கிறது, விளையாடுறது, கதை சொல்றது, காமெடி பண்றது, சமையல் பண்றதுன்னு நாங்க இணை பிரியாத ஃப்ரெண்ட்ஸ்.ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்பல்லாம் என்னால சைக்கிள், பைக் ஓட்ட முடியலையேங்கிற கவலையை எனக்கு டிரைவரா இருந்து என் ஃப்ரெண்ட்ஸ்தான் நிவர்த்தி செய்வாங்க.
பக்ருவின் இரண்டாம் மகள் :
இப்போ 5வது படிக்கிற என் பொண்ணுதான், என் சைக்கிள் டிரைவர். எனக்கு வந்த குறை அவளுக்கு இல்லை என்பதில் நான் ஆண்டவனுக்கு நன்றி தெரிவிச்சிக்கிறேன் என்றார் பக்ரூ. இப்படி ஒரு நிலையில் பக்ருவின் மகளின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.