விஜய்யின் இந்த இரண்டு படத்தின் வாய்ப்பை தவரவிட்டுள்ள 7C கெப்ரிஎல்லோ

0
9862
gabrella
- Advertisement -

சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி நாம் பார்த்த எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்கள் பேபி சாரி பேபி எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார்கள் அதேபோல சின்னத்திரையிலும் பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் அந்தவகையில் கெப்ரிஎல்லோ சார்ல்டன் ஒருவர். இவர் பிரபலமானது என்னவோ விஜய் தொலைக்காட்சி மூலம் தான்.

-விளம்பரம்-

வீடியோவில் 9:19 இல் பார்க்கவும்

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் நடனத்தில் ஆர்வம் உள்ள நபர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் ஜோடி என்ற நடன நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான் கேப்ரில்லா. 1999 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். மேலும், ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பட்டத்தை வென்ற இவருக்கு பின்னர் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் .ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடிய இந்த தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த கேப்ரில்லவிற்கு பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

7 சி தொடருக்குப் பின்னர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள கெப்ரில்லா, பாலாவின் தார தப்பட்டை படத்திலும், விஜய்யின் பிகில்,விஜய் 64 படத்தின் வாய்ப்பை தவறவிட்டதாக கூறியுள்ளார்.

Advertisement