8 தோட்டாக்கள், ஜீவி பட நடிகர் நடித்துள்ள ‘மெமரேஸ்’ எப்படி ? முழு விமர்சனம் இதோ.

0
727
- Advertisement -

நடிகர் வெற்றி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மெமரீஸ். இயக்குநர்கள் ஷியாம் மற்றும் பிரவீன் இயக்கத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. சைக்கோ திரில்லர் பாணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் மெமரீஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் மலைப்பகுதி ஒன்றில் கதாநாயகன் வெற்றி மயங்கிய நிலையில் இருக்கிறார். அவருக்கு நினைவுகள் வந்தவுடன் தனக்கு என்ன ஆனது? எங்கிருக்கிறோம்? என புரியாமல் தவிக்கிறார். அந்த நேரத்தில் அந்த இடத்திற்கு ராமானுஜன் என்ற ஒருவர் வருகிறார். அவர், நீ யார்? என்பதை அடுத்த 17 மணி நேரத்திற்குள் கண்டுபிடி என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் இரண்டு கொலைகளை செய்துவிட்டு குற்றவாளி தப்பி ஓட்டம் என்ற செய்தியில் குற்றவாளியாக கதாநாயகன் வெற்றி பெயரும், புகைப்படமும் வருகிறது.

- Advertisement -

இதை கண்டு வெற்றி அதிர்ச்சி அடைகிறார். இதனை அடுத்து போலீஸ் கதாநாயகன் வெற்றியை துரத்தி வருகிறது. இதை அறிந்து கொண்டு வெற்றியும் ஓட ஆரம்பிக்கிறார். பின் வெற்றியின் நண்பர்கள் அவரை காப்பாற்றி வேறு ஒரு இடத்திற்கு அழைத்து செல்கிறார்கள். ஆனால், இவர்கள் தன்னுடைய நண்பர்கள் தான் என்பது வெற்றிக்கு நினைவில் வரவில்லை. இருந்தாலும், நண்பர்கள் வெற்றிக்கு பழைய சில நினைவுகளை
கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.

ஆனால், வெற்றியால் தான் யார்? என்பதை உணர முடியவில்லை. தன் நண்பர்கள் பற்றியும் தெரியவில்லை. அது மட்டும் இல்லாமல் வெற்றி, நான் யாரையும் கொலை செய்யவில்லை என்றும் கூறுகிறார். இப்படி நடந்து கொண்டிருக்கும்போது ராமானுஜன் என்பவர் மீண்டும் வெற்றியை இன்னொரு இடத்தில் சந்தித்து, நீதான் இந்த கொலைகளை செய்தாய். கொலையை செய்து தப்பிக்கும்போது விபத்தில் சிக்கி உன் நினைவுகளை இழந்து விட்டாய் என்று அவரை நம்ப வைக்கிறார்.

-விளம்பரம்-

வெற்றியும் தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொள்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் கொலைகளை செய்து திட்டமிட்டு தன்னை சிக்க வைக்கிறார்கள் என்பதை வெற்றி புரிந்து கொள்கிறார். இறுதியில் வெற்றிக்கு பழைய நினைவுகள் வந்ததா? அதிலிருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? ராமானுஜன் என்பவர் யார்? உண்மையில் தன்னுடைய நண்பர்கள் யார்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் வெங்கி கதாபாத்திரத்தில் நடிகர் வெற்றி நடித்திருக்கிறார்.

வழக்கம்போல் வெற்றி தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கி

றார். சாதாரண பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குநர் அதை திரில்லர் பாணியில் கொண்டு சென்று இருப்பது பாராட்டுகளை பெற்றிருக்கிறது. படத்தில் நம்ப முடியாத பல டுவிஸ்ட்களை வைத்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் இயக்குனர். ஒரு மனிதனுடைய நினைவுகளை எல்லாம் அழித்துவிட்டு புதிய நினைவுகளை அவனுக்குள் புகுத்தி 17 மணிநேரத்திற்குள் என்ன நடக்கிறது? என்பது தான் படத்தின் கருவாக இருக்கிறது. எதிர்பாராத பல திருப்பங்களை கொடுத்து ஒரு சைக்கோ திரில்லர் பாணியில் இயக்குனர் கதையை செய்திருப்பது பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

ஆனால், ஒளிப்பதிவும் கலையையும் படத்தில் சொதப்பி இருக்கிறது. இயக்குனர் கதையில் காட்டிய கவனத்தை தொழில்நுட்ப விஷயங்களில் காட்டி இருந்தால் படம் வேற லெவலில் ஹிட் கொடுத்திருக்கும். பின்னணி இசை ஓகே. ஆனால், படத்தின் பிற நடிகர்களின் நடிப்பு படத்திற்கு செட் ஆகவில்லை. விறுவிறுப்பாக செல்லும் காட்சிகளுக்கு இடையே காதல் பாடல்கள் வந்திருப்பது திரைக்கதையில் சொதப்பல் என்றே சொல்லலாம். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக மெமரீஸ் இருக்கிறது.

பிளஸ்:

வெற்றியின் நடிப்பு சிறப்பு

திரைக்கதை அருமை

வித்தியாசமான கதை

பின்னணி இசை படத்திற்கு பக்க பலம் சேர்த்திருக்கிறது

மைனஸ்:

ஒளிப்பதிவு சொதப்பல்

முதல் பாதி மெதுவாக செல்கிறது

இயக்குனர் பிற தொழில்நுட்ப விஷயங்களில் கவனம் செலுத்தி இருக்கலாம்

மொத்தத்தில் மெமரிஸ்- நினைவில் இருக்கும்

Advertisement