தமிழ் சினிமாவில் இருந்த 90ஸ் நடிகைகளை இன்றளவும் கண்டிப்பாக மறக்க முடியாது. மேலும், 90ஸ் கால கட்டத்தில் கொடிகட்டி பறந்த பல நடிகைகள் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்த வகையில் நடிகை மோஹினியும் ஒருவர். மோஹிணி கிறிஸ்டினா ஸ்ரீனிவாசன் இவர் 1978 ஜூன் 9ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தவர். 1991 ஆண்டு ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
புதிய மன்னர்கள் , நானா பேச நினைப்பதெல்லாம், நாடோடி பாட்டுக்காரன் போன்ற நல்ல படங்களில் நடித்தார் நடிகை மோஹினி. படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இவர் ஒரு சில தொலைக்காட்சி தொடரில் கூட நடித்துள்ளார். கதாநாயகியாக நடித்த போதே சன் தொலைக்காட்சியில் 96 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘காதல் பகடை’ என்ற தொடரில் நடித்தார்.
இறுதியாக 2006 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜராஜேஸ்வரி’ என்று தொடரிலும் நடித்து வந்தார்.அதன் பின்னர் இவரை எந்த சினிமாவிலும் சீரியலில் கூட காண முடியவில்லை. பட வாய்ப்புகள் குறைய குறைய இவரும் ஒரு முடிவெடுத்து, 1999ஆம் ஆண்டே ‘பரத்’ என்ற ஒரு பிசினஸ் மேனுடன் திருமணம் செய்துகொண்டு, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடைசியாக 2011ல் கலெக்டர் என்ற ஒரு மலையாள படத்தில் நடித்தார். அதன் பின்னர் அவரை எந்த படங்களிலும் பார்க்க முடிவதில்லை. இவரது தாய் தந்தையர் இந்துக்கள், ஆனால் அமெரிக்காவில் இருக்கும் போது கிறிஸ்துவ மதத்திற்கு மாறி தற்போது அங்கு கிறிஸ்துவ மத போதாகறாக இருந்து வருகிறார் மோஹிணி கிறிஸ்டினா.இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மோகினி, மதம் மாறியதற்கான காரணம் குறித்து பேசுகையில்,
நன்றாக சென்று கொண்டு இருக்கும் நம்முடைய வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. திருமணத்திற்கு பின்னர் சில நிகழ்வுகளால் நான் உடலளவிலும் மன அளவிலும் பாதிக்கப்பட்டேன். வாழவே பிடிக்காமல் தற்கொலை எண்ணங்கள் கூட வந்து சிரமப்பட்டேன். எத்தனையோ மருத்துவர்களை சந்தித்து அதற்கு தீர்வு கிடைக்கவில்லை. இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட கிறிஸ்துவ மத போதனைகளும் வழிபாடுகளும் தான் கைகொடுத்தது. அந்த மதத்திற்கு மாறி மக்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் பணிகளை மனநிறைவுடன் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.