பில்லா2 வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் – இந்த படத்தில் நாட்டாமை பட நடிகைய நோட் பண்ணியிருக்கீங்களா ?

0
3793
billa
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ சூப்பர் ஹிட் படங்கள் மீண்டும் தமிழிலேயே ரீ – மேக் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘பில்லா’ படத்தை இயக்குனர் விஷ்ணு வரதன் அஜித்தை வைத்து இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் அஜித்துக்கு ஒரு மிகப்பெரிய மாஸ் அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-35-1024x512.jpg

இந்த படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ட்விட்டரில் #9YearsOfBilla2 என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நாட்டாமை பட நடிகை நடித்த ஒரு சுவாரசியமான செய்தியும் வைரலாகி வருகிறது. 1994ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்தது நாட்டாமை படம். இந்த படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரது காமெடி உச்சத்தை எட்டியது.

- Advertisement -

அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் இவர்களது காமெடி.அப்போது ஒரு சீனில் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும் போது, பெண்ணின் அப்பா உட்கார்ந்து மிக்ஸர் மட்டுமே சாப்பிட்டு கொண்டிருப்பார். அந்த காமெடி இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.அதே காட்சியில் வரும் பெண் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இவர் நாட்டாமை படத்திற்கு பின்னர் லிங்கா படத்தில் கூட நடித்து இருக்கிறார்.

நாட்டாமை படத்திற்கு பின்னர் கே எஸ் ரவிக்குமாரின் லிங்கா படத்தில் நடித்த போது அங்கே இருந்தவர்கள் பலரும் இவரை நாட்டாமை படத்தில் நடித்த நடிகை என்று நம்பவில்லை. இவர் இந்து , சேதுபதி ஐபிஎஸ் , நம்ம அண்ணாச்சி, மே மாதம் என்று பல படங்களில் நடித்து உள்ளார். ‘பில்லா 2’ படத்தில் கூட நடித்துள்ளார். இதனை சமீபத்தில் அவரே நம்மிடம் உறுதி செய்ததை அடுத்து பில்லா படத்தில் இவரை தேடினோம். அப்போது சிக்கியது இவர் நடித்த காட்சி.

-விளம்பரம்-
Advertisement