தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் நடைபெற்று வரும் இயற்கை அழிவுகள் அனைத்தும் சூர்யாவின் படங்களில் வரும் காட்சிகள் போலவே இருக்கிறது என்று மீம் கிரியேட்டரகள் கிளப்பி விட பின்னர் சூர்யா படங்களில் வரும் காட்சிகளை தற்போது நாட்டில் நடக்கும் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு பல்வேறு மீம்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் சீனாவில் இருந்து வரும் ஒரு நபர் கெட்ட வைரஸை பரப்புவது போன்ற காட்சி காண்பிக்கப்படும்.
தற்போது உலகம் முழுவதும் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அதே போல சூர்யா நடித்த காப்பான் படத்தில் வெட்டுக்கிளிகளை பற்றிய காட்சிகள் இடம் பெற்று இருக்கும். அதே போல் வடநாட்டில் விளைநிலங்களில் வெட்டுக்கிளிகள் புகுந்து அட்டகாசம் செய்துவந்தன. இதனால் நெட்டிசன்கள் சூர்யாவை ட்ரோல் செய்யும் மீம்ஸ்களை வெளியிட்டு வந்தனர்.
இதே போல பல சம்பவங்களை சூர்யா படங்கங்களுடன் ஒப்பிட்டு அன்றே கணித்தார் சூர்யா என்று பல மீம்கள் வைரலானது. இப்படி ஒரு நிலையில் ஜோதிகா படத்தில் வந்த பொன்மகள் வந்தால் படத்தை பார்த்து சிறுமி ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை பற்றி கூறியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பிராட்வே ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த தம்பதியின் ஒன்பது வயது மகளை கடந்த பிப்ரவரி மாதம் ராயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச் சென்றனர். ஐந்து மாதங்கள் கழித்து மீண்டும் தன்னுடைய மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் அந்த சிறுமியின் தாயார்.இப்படி ஒரு நிலையில் தொலைக்காட்சியில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தினை பார்த்துக்கொண்டிருந்துள்ளர்.
அப்போது அந்த படத்தின் ஒரு காட்சியில் தாயிடம் எதையும் மறைக்க கூடாது என்ற வசனங்களை கேட்ட பின்னர் தனது அம்மாவிடம் தங்கள் உறவினரான கணேசன் வீட்டில் இருந்தபோது கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் தாயார் ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து சிறுமி குற்றம் சாட்டிய அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து இருந்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் தற்போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது நிரூபிக்கப்பட்டதால் கணேசனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜோதிகா ‘ உங்களின் மௌனத்தை உடையுங்கள். ஒரு பெண் தனக்காக நிற்கும்போது, அவருக்கே தெரியாமல் அவள் அனைத்து பெண்களுக்காவும் துணையாக நிற்கிறான்’ என்று பதிவிட்டிருக்கிறார்