நீண்ட இடைவேளைக்கு பின்னர் ரீ என்ட்ரி கொடுக்கும் 90 ஸ் நடிகர் ராஜா.

0
84802
raja
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சியான் விக்ரம். இவருடைய மகன் துருவ் சினிமா களத்தில் குதித்துள்ளார். தற்போது விக்ரம் மகன் துருவ் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் “ஆதித்ய வர்மா”. இந்த படத்தில் துருவின் அப்பா என்ற கதாபாத்திரத்தில் ‘கடலோர கவிதைகள்’ ராஜா அவர்கள் நடித்து இருக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது. இது குறித்து நடிகர் ராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியது, நான் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமா உலகில் ரி என்ட்ரி கொடுக்கிறேன். இது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு. என்னுடைய உண்மையான பெயர் வெங்கடேஷ். படத்துக்காக தான் என்னுடைய பெயரை ராஜா என்று மாற்றினேன். அதுவும் இயக்குனர் பாரதிராஜா சார் தான் மாற்றி வைத்தார்.மேலும், இயக்குனர் பாரதிராஜா சார் தான் என்னை ‘கடலோர கவிதைகள்’ படத்தில் மூலம் சினிமா திரைக்கு அறிமுகம் செய்தார்.

-விளம்பரம்-
Raja

அதுமட்டுமில்லாமல் அவருடைய இயக்கத்தில் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால், தற்போது சினிமா துறையில் 18 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்கின்றது. மேலும்,நடிகர் முரளி அவர்கள் நடித்த ‘கண்ணுக்கு கண்ணாக’ படத்தில் தான் கடைசியாக நடித்தேன். அதற்குப் பிறகு வித்தியாசமான கதாபாத்திரங்கள் எதுவும் வராத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி இருந்தேன். மேலும்,என்னுடைய மார்பிள் பிசினஸ் தொழிலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் ஆதித்ய வர்மா படத்தோட வாய்ப்பு வந்தது. இந்த வாய்ப்பு நடிகர் விக்ரம் மூலம் தான் கிடைத்தது. மேலும்,’பொண்ணியன் செல்வன்’ படத்திற்காக குதிரை பயிற்சிக்கு கிளப்புக்கு வருவார் நடிகர் விக்ரம். அங்கு தான் நாங்க ரெண்டு பேரும் அடிக்கடி சந்திப்போம்.

- Advertisement -

நிறைய விஷயங்களை ரெண்டு பேருமே பேசி மகிழ்ந்து வருவோம். மேலும்,நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டோம். அப்போது தான் நடிகர் விக்ரம் அவர்கள் ‘ஆதித்ய வர்மா’ படத்தைப் பற்றி என்னிடம் சொன்னார். பின் படத்தில் வருகிற அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா? என்று கேட்டார். நான் விக்ரம் சார் கேட்டவுடனே மறுப்பு தெரிவிக்க முடியாமல் ஓகே என்று சொல்லிட்டேன். சினிமா துறையை உலகிற்கு விக்ரம் வந்த ஆரம்ப காலத்தில் இருந்தே எனக்கு அவரைத் தெரியும். அவர் சினிமா திரை உலகில் டப்பிங் ஆர்டிஸ்டாக இருந்த காலத்தில் கலா மாஸ்டர் கிட்ட டான்ஸுக்கு வருவார். நானும் அவர்கள் கிளாசுக்கு செல்வேன்.அப்போதிலிருந்தே நாங்கள் ரெண்டும் பேரும் பழக்கம். அப்புறம் விக்ரம் அவர்கள் படங்களில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

Raja in Adithya Varma

சினிமா துறையில் ஒரு பிரபல நடிகராகவும் மாறி விட்டார். அவரை அடிக்கடி நடிகர் சங்கத்தில் தான் சந்திப்பேன். இந்நிலையில் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் விக்ரம் இருப்பார். எப்படி நடிக்கணும், எப்படி சொல்லனும்னு எல்லாமே எனக்கு சொல்லிக் கொடுப்பார். குறிப்பா படத்தில் என்னுடைய காட்சிகளை எல்லாம் அவர் தான் சொல்லிக் கொடுத்தார். அதுமட்டும் இல்லாமல் விக்ரம் பக்கத்தில் இருந்தால் ஏதோ ஒரு பெரிய நம்பிக்கை கொடுக்கிற மாதிரி இருக்கும். இந்த ஆதித்ய வர்மா படத்தை தெலுங்கு மற்றும் இந்தி வெர்சனையில் பார்த்தாலும் ரசிகர்களுக்கு தமிழில் பார்க்கும் போது ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என நான் நம்புகிறேன்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் நடிகர் விக்ரம் இயக்குனராக எல்லா வாய்ப்பும், தகுதியும் இருக்கிறவர். அந்த அளவுக்கு படப்பிடிப்பின் போது அவருடைய திறமையை வெளிக்காட்டினார். சின்ன சின்ன டெக்னிக்கல் விஷயங்கள் எல்லாம் அவர் நிறைய தெரிஞ்சுக்கிட்டு இருக்காரு. பல வருஷங்களுக்குப் பிறகு நான் சினிமா துறையில் நடிக்க வந்த போது எனக்குள்ள இருந்த தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் உடைத்தவர் அவர் தான். மேலும், இந்த படத்தின் டிரைலருக்கு பிறகு நிறைய பேர் படத்தில் நடிக்க கேட்டாங்க. நான் நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் நடிப்பேன் என்று கூறினார் ராஜா.

Advertisement