ரஜனி, கமல் என்று பல்வேறு படங்களில் நடித்த விஜயாவின் நிலை என்ன தெரியுமா ?

0
14573
y-vijaya
- Advertisement -

சினிமா உலகில் 80 கால கட்டங்களில் நடித்த முன்னணி நடிகைகளில் பிரபலமான நடிகை ஒய்.விஜயா. மேலும், நடிகை விஜயாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதோடு இவர் சினிமா திரையுலகில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ஒரு கலக்கு கலக்கியவர். இதனைத்தொடர்ந்து நடிகை விஜயா அவர்கள் 1957 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்ணுல் மாவட்டத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எனிகந்த்லா ஜானியானியா, தாயார் பாலம்மா ஆவார். மேலும், இவருடைய தந்தை கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணி புரிந்தவர். இவருக்கு தற்போது 60 வயது ஆகிறது.

-விளம்பரம்-
vijaya

- Advertisement -

இந்நிலையில் நடிகை விஜயா அவர்கள் உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். அதில் ஐந்தாவதாக பிறந்தவர் தான் நடிகை விஜயா. மேலும்,நடிகை விஜயா அவர்கள் கடப்பாவில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டார். அதோடு இவருக்கு ஹிந்தி பாடத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். மேலும்,நடிகை விஜயா அவர்களுக்கு நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். இதனாலேயே இவர் நிறைய மேடைகளிலும் நடனமாடியிருக்கிறார். இவருடைய நடன ஆர்வத்தைப் பார்த்து இவருடைய பெற்றோர்கள் இவரை நடனப் பள்ளியில் சேர்த்தார்கள்.

பின் இவர் நடனத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். மேலும்,அதோடு இவர் கிளாசிக்கல் நடன மங்கையும் ஆவார். மேலும், நடிகை விஜயா அவர்கள் தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த என்.டி.ராமராவ் உடன் இணைந்து “ஸ்ரீ கிருஷ்ணா சத்யா” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதனை தொடர்ந்து நடிகை விஜயா அவர்களுக்கு சினிமா துறையில் பல பட வாய்ப்புகள் வந்தது. மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் சினிமா உலகில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

actress vijaya

தமிழில் இவர் நடித்த கிளிஞ்சல்கள், ராஜாதிராஜா, தில்லுமுல்லு, மங்காத்தா சபதம், எங்க ஊரு பாட்டுக்காரன் என பல சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து உள்ளார். அதோடு இவர் நடித்த படங்களில் முக்கியமான படங்கள் என்று இதைச் சொல்லலாம். ஒய்.விஜயா அவர்களுக்கு 1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி திருமணம் நடந்தது. நடிகை விஜயா அவர்களின் கணவர் பெயர் அமலநாதன். இவர் கல்லூரியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது தனியாக தொழில் செய்தும் வருகிறார். அதோடு இவர்களுக்கு அனோஸ்கா என்ற மகளும் உள்ளார். தற்போது நடிகை விஜயா அவர்கள் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் வசித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகை விஜயாவின் மகள் அனுஷ்காவிற்கு 2013ம் ஆண்டு தான் திருமணமும் முடிந்தது.

Advertisement