விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் ஓவியா. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட ஆர்மிகளும் கூட உருவானது. அந்த புகழை வைத்து இவருக்கு எந்த படத்தில் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு ’90ml’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை அனிதா உதீப் என்ற பெண் இயக்குனர் தான் இயக்கி இருந்தார்.
படு மோசமான ஆபாச காட்சிகள்வசனங்கள் இருந்ததால் இந்த படம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அனிதா உதீப் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு, 90 ml படத்தை பார்த்துவிட்டு எங்களை தே*** என்று திட்டிய அனைவரும் சூப்பர் டீலக்ஸ் படத்தை ஏன் எதிர்க்கவில்லை
பெண்கள் நடித்தால் தவறு, அதே ஆண்கள் நடித்தால் தவறு இல்லையா என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கைகளை கொச்சைப்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் திருநங்கை அமைப்பினர்கள் விஜய் சேதுபதியை கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.