அண்டர் டேக்கருக்கு 7 உயிர்.! கட்டிபிடிச்ச குழந்த பொறந்துடும்.! கெத்து காட்டும் #90sKidsRumors.!

0
1089
90s-kids
- Advertisement -

அண்டர் டேக்கருக்கு 7 உயிர், பழ கொட்டைய முழுங்கினா வயித்துல மரம் வளரும், மாடியில இருந்து குதிச்சா சக்தி மான் காப்பாத்துவாரு, கட்டிபிடிச்சா கொழந்த பொறக்கும் இது தாங்க 90 ஸ் கிட்ஸ்சோட லாஜிக். கேட்பதற்கு இப்போது காமெடியாக இருந்தலும் அன்று இதை சொல்லித்தான் 90 ஸ் கிட்ஸ்களின் காலம் நகர்ந்தது.

-விளம்பரம்-

90டீஸ் கிட்ஸ் என்றதும் பலருக்கு பளிச்சென்று பல் தெரியும். ஆனந்த புன்னகை வெளிவரும். நீங்களும் 90டீஸ் கிட்டா? நானும் அதேதான் என்று பலர் ஹைஃபை போட்டுக்கொள்வார்கள். என்னதான் 90ஸில் பிறந்தவர்கள் இனியேனும் கிட்ஸ் இல்லை என்பது கசக்கும் உண்மை என்றாலும், அந்த உண்மையை 90ஸ் கிட்ஸ் மனம் ஏற்க சற்றே தயங்குகிறது.

- Advertisement -

ஏனெனில், எந்த டிக்கேடில் பிறந்தவர்களும் தொன்னூருகளில் பிறந்தவர்கள் போல் பிரபலமாகவில்லை என்று சொன்னால் அது நிச்சயமாக மிகையல்ல. 90ஸ் கிட்ஸ் என்றாலே கெத்து, தொழில்நுட்பம் வளர்ச்சிற்கும் ஆக்கிரமிப்புக்கும் மத்தியில் பிறந்த பாக்கியசாலிகள், சமூக வலைதளங்கள், தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றளவில் மறக்கப்பட்ட பல ஸ்வாரசிய விஷயங்கள் என தங்களின் எதார்த்தத்தை எப்போதும் மிகைப்படுத்தாமல் சொல்லிக்கொல்வதில் கில்லாடிகள் என்றும் சொல்லலாம்.

இதற்கிடையே, தற்போது ட்விட்டரில் ஒரு ஹேஷ்டேக் பெரிதும் ட்ரெண்டாகி வருகிறது. அது என்னவென்றால், 90களில் பிறந்தவர்கள் தங்கள் சிறு வயதில் நம்பப்பட்ட வதந்திகளை #90sKidsRumors என்ற ஹேஷ்டேக்கில் பகிர்ந்து 2000 கிட்ஸை தலை கிறுகிறுக்க செய்கிறார்கள். இதை பார்க்கும் 90 கிட்ஸ்களோ மனம் துள்ளலோடு தங்கள் குறும்பு காலங்களை நினைவு கூறிவருகிறார்கள்

-விளம்பரம்-
Advertisement