விஜய் 64 படத்தில் இணைந்த 96 பிரபலம். அவரே உறுதி செய்த தகவல் இதோ.

0
2800
janu-in-thalapathy-64
- Advertisement -

பிகில் படத்தை தொடர்ந்து இளையதளபதி விஜய் தற்போது கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்த புதிய படத்தை ரசிகர்கள் ‘தளபதி 64’ என்று அழைத்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்டை பட புகழ் மாளவிகா மோகன் நடித்துவருகிறார். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுபோக பாக்யராஜ் மகன் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியம் என்று பல்வேறு நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த படத்தில் 96 புகழ் கௌரி கிஷன் இணைந்துள்ளதாக தகவல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைரலாகி வந்தது. விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ’96’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷன் மகள் கௌரி கிஷனும் என்பவரும் நடித்துள்ளார். இந்த படத்தில் ராம்-ஜானு ஜோடிதான் இணையத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. அதில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது. குறிப்பாக திரிஷாவின் பள்ளி கதாபாத்திரத்தில் கௌரி கிருஷ்ணனும் நடித்து பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தனர். அதிலும் குறிப்பாக பள்ளி பருவ திரிஷாவாக நடித்திருந்த கௌரிக்கு ரசிகர்களும் உருவாகியுள்ளனர்.

இதையும் பாருங்க : அஜித்தின் காதல் கோட்டை படத்தில் நடித்த ஹீராவா இது. பாத்தா நம்ப மாடீங்க.

- Advertisement -

இப்படத்தில் இவரின் நடிப்பு பலரை கவனம் ஈர்த்ததால் அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 96 படத்திற்கு பின்னர் கௌரி அடுத்து மலையாள சினிமாவில் கால் எடுத்துவைத்தார். அனுகிரஹித்தன் என்னும் இந்த படத்தில் பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் நடிக்கிறார். மேலும் கௌரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடிக்கிறார். ஆனால், தற்போது தளபதி படத்தில் நடிக்கவுள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்ட அவர், என்னிடம் இது உண்மையா என்று கேட்ட பலருக்கும் இது உண்மைதான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நானும் இருப்பது மிகவும் உற்சாகம் அளிக்கிறது. உங்களுடைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் தேவை என்று பதிவிட்டுள்ளார்.தளபதி 64 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப் பட்டது. சூழ்நிலை சரியானதும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்திற்கு 120 நாள் மட்டுமே விஜய் கால்ஷீட் கொடுத்துள்ளதால், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் மும்முரமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதேபோல விஜய் சேதுபதியும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருவதால் டிசம்பர் மாதத்திலேயே விஜயசேதுபதியின் காட்சிகளை படமாக்கி முடித்துவிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement