96 படமும் திருட்டு தான்..!அதற்கு நான் தான் ஆதாரம் ..!இயக்குனர் பாரதிராஜா..!

0
314
Suresh

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் கதை திருட்டு விவகாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “96” படமும் கதை திருட்டு தான் என்று இயக்குனர் பாரதி ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

Suresh

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’96’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் , இதே போன்ற கதை தன்னிடம் இருந்ததாகவும் அதனை பாரதி ராஜாவை இயக்க வைத்து இளையராஜாவை இசையமைக்க வைக்க திட்டமிட்டிருந்தாகவும் பாரதி ராஜாவின் உதவி இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் என்பவர் குற்றச்சாட்டை முன்வைதிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ள இயக்குனர் பாரதி ராஜா, 96 படத்தின் கதை சுரேஷ்ஷுடையது தான். அவன் கதையும் 96 படத்தின் கதையும் 90 சதவீதம் ஒரே போல தான் இருகிறது. ஆனால், இந்த படத்தின் கதையை அவன் 2013 ஆம் ஆண்டே என்னிடம் சொல்லி இருக்கிறான். ஆனால், அப்போது எனக்கு சரியாக நேரம் கிடைக்கவில்லை. அதனால் அந்த படத்தை அப்படியே விட்டுவிட்டேன்.

Bharathiraja

ஆனால், அதே போல கதையை வேறு யாரோ எடுத்திருப்பதை கண்டு ஆச்சர்யமடைந்தேன். சுரேஷ் இந்த படத்தை 92 என்ற தலைப்பில் எடுப்பதாக இருந்தான். அது அவனுடைய சொந்த வாழ்வில் நடந்த கதை. அதே போல இந்த படத்தின் கதையை பற்றி 96 படத்தில் நடித்த மருதபாண்டிக்கும் தெரியும். இப்போதைக்கு நாங்கள் என்ன செய்ய முடியும் நாங்கள் தயரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம் விரைவில் என்ன நடக்கும் என்று பாப்போம் என்று தெரிவித்துள்ளார்.